சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இலங்கை வர நினைத்தால் தாராளமாக வரலாம். அவர் இலங்கையிலும் பிரபலமான நடிகர்தான். அவருக்கு அங்கு எந்த எதிர்ப்பும் இல்லை. அவர் வருவதில் ஒரு பிரச்சினையும் இல்லையென இலங்கையின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் லைகா நிறுவனம் சார்பில் புதிய வீடுகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, ரஜினி திட்டமிட்டிருந்தார். ஆனால், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஒருசிலரின் எதிர்ப்பு காரணமாக இலங்கை பயணத்தை இரத்து செய்தமை குறிப்பிடத்தக்கது.