முறையாக யானை வேலி அமைக்காமையால் யானையின் அட்டகாசம் -கிண்ணியாவில் சம்பவம்



ஹஸ்பர் ஏ ஹலீம்-


கிண்ணியா ஆயிலியடியில் யானையின் அட்டகாசம் மீண்டும் துவங்கியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர் நேற்று முன்தினம்(02) ஆயிலியடியில் ஒருவரின் காணிக்குள் புகுந்து வீடு உட்பட குடியிருப்பு பகுதிகளையும் விவசாய பயிர்களையும் துவம்சம் செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.இப்பகுதியில் இதுவரைக்கும் கடந்த காலங்களில் இருவர் யானையின் தாக்குதலினால் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இப் பகுதியில் யானை வேலியமைத்தும் மீண்டும் யானையின் அட்டகாசம் தொடங்கியுள்ளதால் நிம்மதியாக தங்களால் வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதிலும் இப் புனித றமழான் மாதத்தில் தங்களது கடமைகளை நிறைவேற்றுவதிலும் பல சிக்கல்களும் அச்ச நிலையும் காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.எனவே முறையான யானைவேலி அமைப்புக்களை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறும் தங்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லை எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்கள்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -