இலங்கையில் இஸ்ரேலுக்கான கதவுகளைத் திறந்து விட்டவர் மகிந்த ராஜபக்ஷ

லத்தீப் பாரூக்-

சில தசாப்த்தங்களுக்கு முன் இஸ்ரேல் கொழும்பில் மிகக் குறைந்த மட்டத்தில் அதன் சுதந்திர தினத்தைக் கொண்டாடியது. அப்போது நாட்டின் தலைசிறந்த இடது சாரி அரசியல்வாதியான சரத் முத்தட்டுவேகம பாராளுமன்றத்தில் பேசும் போது இஸ்ரேலுக்கு அதன் வெற்கக் கேடான சுதந்திர தினத்தை மிகவும் கௌரவமான கொழும்பு போன்ற ஒரு மூன்றாம் மண்டல நாட்டின் தலை நகரில் கொண்டாட என்ன அருகதை இருக்கின்றது? என்று கேள்வி எழுப்பினார்.

உலகம் முழுவதும் நீதிக்காக குரல் கொடுத்த கௌரவமான வெளிநாட்டுக் கொள்கையை நமது நாடு கொண்டிருந்த பொன்னான நாற்கள் அவை. உலகம் முழுவதையும் இது கவர்ந்திருந்தது.

ஆனால் இன்று எல்லாமே மாறிப் போய்விட்டன. இன்றைய ஆட்சியாளர்கள் இஸ்ரேலை எல்லா கௌரவத்தோடும் ஏற்றுக் கொண்டுள்ளளனர். இலங்கை பலஸ்தீனத்தை கிட்டத்தட்ட கைவிட்டு விட்டது. இன்று இலங்கையில் பல்வேறு பிரிவுகளில் இஸ்ரேலுக்கான கதவுகளைத் திறந்து விட்டவர்கள் ராஜபக்ஷ ஆட்சியாளர்கள்.

அதற்கு ஒரு படி மேலே சென்று ரணில் விக்கிரமசிங்க தற்போது அவர்களுக்கு செங்கம்பளம் விரிக்கின்றார். பிரதான பிரிவு ஊடகங்கள் உட்பட அவர்கள் தற்போது எல்லா பிரிவுகளுக்குள்ளும் ஊடுறுவி உள்ளனர். இஸ்ரேலின் குற்றப் பின்னணிகளை எந்த வகையிலும் கண்டு கொள்ளாத அரசியல் வாதிகளையும் அவர்கள் இப்போது வளைத்துப் போட்டுள்ளனர்.

இன்றைய மாற்றம் கண்டுள்ள அரசியல் சூழலின் ஒரு பகுதியாக இஸ்ரேல் சுதந்திர தினம் என சொல்லிக் கொள்ளும் அதன் வெற்கக் கேடான தினத்தை கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் கடந்த வாரம் கொண்டாடியுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட வெளியுறவு அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட பல அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர். இது தவிர அரசாங்க அரசியல் மற்றும் வர்த்தக உயர் மட்டத்தில் இருந்தும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இங்கே விடை காண முடிhத ஒரு கேள்வி எழுகின்றது. இஸ்ரேல் எங்கிருந்து அல்லது யாரிடம் இருந்து தனது சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டது? என்பதுதான் இந்த கேள்வி. இஸ்ரேல் அரங்கேற்றும் பல மோசடிகளில் இதுவும் ஒன்று. வன்முறைவாத இனவாத இஸ்ரேல் பலஸ்தீனர்களின் தாயக பூமிக்குள் பலவந்தமாக திணிக்கப்பட்ட ஒரு பகுதி என்பதே உண்மையாகும். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா போன்ற வல்லரசு சக்திகளோடு சியோனிஸ யூதர்கள் இணைந்து உருவாக்கிய சட்ட விரோத அரசு தான் இஸ்ரேல்.

இலங்கையில் மாறிமாறி பதவிக்கு வரும் ஆட்சியாளர்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் முஸ்லிம் சமூகத்தின் நீண்ட கால கவலைக்குரிய விடயமாக இருந்து வந்த ஒன்று தான் இலங்கை அரசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் வளாச்சி கண்டு வரும் உறவுகள். காரணம் இத்தகைய உறவுகள் முஸ்லிம்களுக்கு அழிவையே ஏற்படுத்தும் நோர்வே ஊடாக இஸ்ரேலால் உதவி வழங்கப்படும் அமைப்பே பொது பல சேனா என்பது பெரும்பாலானவர்களின மிக உறுதியான சந்தேகமாகும்.

முஸ்லிம்களுக்கு எதிராக இஸ்ரேல் இழைத்து வரும் நீண்ட கால அநியாயங்கள், பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் முஸ்லிம் நாடுகளை அழிப்பதற்கு கங்கனம் கட்டி செயற்பட்டு வரும் அமெரிக்கா தலைமையிலான கூட்டணியில் இஸ்Nரைலின் காத்திரமான பங்களிப்பு என்பனதான் இந்த சந்தேகத்துக்கு பிரதான காரணங்களாகும். இத்தகைய ஒரு சக்தி பக்க பலமாக இருப்பதால் தான் பொது பல சேனா போன்ற ஒரு சிறிய குழு நாட்டில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்று கூட துணிச்சலாகக் கூறி வருகின்றது. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கிடையில் மோதிக் கொண்டு செயல் இழந்து நிற்கின்ற நிலையில் இஸ்ரேலும் அதன் ஆதரவு சக்திகளும் நாட்டில் தலைநிமிர்ந்து நிற்கின்றன.

1950களின் ஆரம்ப கட்டத்திலேயே டயிள்யு. தஹநாயக்க பிரதமராக இருந்த காலப்பகுதியில் இஸ்ரேல் இலங்கையுடன் நெருக்கமான எறவுகளைப் பேண முனைந்தது. 1958ல் வதிவிடமில்லா இலங்கை தூதுவர் ஒருவர் இஸ்ரேலுக்காக நியமிக்கப்பட்டார். ஆனால் அதன் பிறகு பிரதமராக வந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவரை திருப்பி அழைத்துக் கொண்டார். பின்னர் 1965 முதல் 1970 வரையான ஐ.தே.க. ஆட்சியிக் காலப்பகுதியில் ரோமில் இலங்கை தூதுவராக இருந்தவர் இஸ்ரேல் விடயங்களையும் கையாண்டார்.

1970 பொதுத் தேர்தல் பிரசாரத்தில் ஐக்கிய முன்னணி சார்பாக வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் இஸ்ரேலுடனான உறவுகள் துண்டிக்கப்படும் என்ற வாக்குறுதியும் வழங்கப்பட்டது. இது அந்தப் பிரிவுக்கு கணிசமான முஸ்லிம்களின் வாக்ககுளைப் பெற்றுக் கொடுத்தது. தனது வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் திருமதி பண்டாரநாயக்க இஸ்ரேல் தூதரகத்தை இழுத்து மூடினார். பொருளாதார ரீதியான தடைகள் விதிக்கப்படும் என்ற அச்சுறுத்தலையும் மீறி அவர் இந்த நடவடிக்கையை எடுத்தார். 1970களில் அவரது ஆட்சி காலப்பகுதியில் தான் பலஸ்தீன விடுதலை இயக்கம் தனது பிரதிநிதி அலுவலகத்தை இலங்கையில் திறந்தது. பின்னர் 1982ல் அது முழு அளவிலான தூதரகமாகத் தரம் உயர்த்தப்பட்டது.

இந்த நாடு தனது அச்சமற்ற முழு சுதந்திரமான கௌரவமான வெளிநாட்டுக் கொள்கையை 1979ல் வெளிப்படுத்தியது. இங்கிலாந்தில் இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் தகுதி காண் போட்டிகளி15 நாடுகளைக் கொண்ட பிரிவில்; இலங்கை அணி இஸ்ரேலை எதிர்த்து விளையாட மறுத்தது.

அதன் பிறகு 1983க்குப் பின் நிலைமைகள் மாற்றம் கண்டன. 83இன் இனக்கலவரம் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தமிழ் ஆயுதப் போராட்டம் என்பனவற்றால் நிலைமைகள் மாற்றம் கண்டன. ஆயுத போராட்டததை நசுக்குவதி;ல் அதீத ஆhவம் காட்ட வேண்டிய தேவை அரசுக்கு ஏற்பட்டது. இந்த நிலைமையை தனக்கு சாதகமாக நன்கு பயன்படுத்திக் கொண்ட இஸ்ரேல் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தனது நலன்புரி பிரிவை நிறுவியது. இந்தப் பிரிவைச் சேர்ந்த டேவிட் மட்னா என்பவர் இஸ்ரேல் தனது புலனாய்வு சேவையான மொஸாட்டின் தீவிர உறுப்பினர் ஒருவரையே கொழும்பு நிலையத்தின் தலைவராக நியமித்தது என்று தெரிவித்துள்ளார்.

அன்றைய அரசின் இஸ்ரேல் உறவுகளை முஸ்லிம்கள் எதிர்த்தனர். முஸ்லிம்களின் மரியாதைக்குரிய மூத்த அரசியல்வாதியாக இருந்த மர்ஹும் டொக்டர் எம்.சீ.எம். கலீல் தலைமையிலான முஸ்லிம் பிரதிகள் குழு அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவை சந்தித்து தமது அதிருப்தியைத் தெரிவித்தனர். ஆனால் அவர்களை நிராகரித்த ஜே.ஆர். 'பயங்கரவாதத்தை ஒழிக்க நான் பேய்களின் உதவியையாவது பெற்றுக் கொள்வேன். முஸ்லிம்கள் விரும்பினால் இந்த அரசில் நிலைத் திருக்கலாம். இல்லையெல் வெளியேறலாம்' என்று பதில் அளித்தார். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டனர். வெளிவிவகார அமைச்சர் ஏ.ஸி.எஸ். ஹமீட் இந்த விவகாரத்தை கையாள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இதனால் விரக்தி அடைந்த முஸ்லிம்கள் குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தமக்கென ஒரு தனிக் கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஸ்தாபித்து அதன் ஊடாக தமது குரல்களை ஒலிக்கச் செய்யும் முயற்சியில் இறங்குவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். இதுவும் பிற்காலத்தில் அனர்த்தத்தயே உருவாக்கியது. வளர்ச்சிகண்ட இந்த உறவுகளின் அடிப்படையில் அன்றைய இஸ்ரேல் ஜனாதிபதி சைம் ஹெர்சொக் 1986ல் இலங்கைக்கு விஜயம் செய்தார்.

ஆனால் இஸ்ரேலுக்கு இலங்கை மீது எந்தவிதமான அக்கறையோ அல்லது உணர்வுகளோ கிடையாது என்பதை காலம் நிரூபித்தது. 'இந்த நாடு அபிவிருத்தி அடையாத நாகரிகம் அடையாத குரங்குகள் போன்ற மக்கள் கூட்டத்தைக் கொண்ட ஒரு நாடு. இவர்கள் மரங்களிலிருந்து கீழே தாவி நீண்ட நாற்கள் செல்லவில்லை. எனவே இவர்களிடம் இருந்து பெரிதாக எதையும் எதிர்ப்பார்க்க முடியாது' என்பது தான் இலங்கையர்கள் பற்றிய இஸ்ரேலின் மதிப்பீடாக இருந்தது. இஸ்ரேல் மொசாட் சேவையின் முன்னாள் உளவாளிகளான விக்டர் ஒஸ்ட்ரொவ்ஸ்கி மற்றும் கிளாயர் ஹோய் ஆகியோர் எழுதிய 'டீல றுயல ழக னுநஉநிவழைn; வுhந ஆயமiபெ யனெ ருnஅயமiபெ ழக ய ஆழளளயன ழுககiஉநச' என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலுடனான இலங்கையின் இரகசிய உறவுகளை வெளிக் கொண்டு வரும் வகையிலான அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் பாரதூர தன்மையை உணர்ந்த அன்றைய ஜனாதிபதி பிரேமதாச அவை பற்றி விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றையும் நியமித்தார். இந்த ஆணைக்குழுவில் கீர்த்திமிக்க ஊடகவியலாளர் மேர்வின் டி சில்வா சாட்சியமளிக்கும் போது சில தகவல்களை வெளியிட்டார்.

'இஸ்ரேலின் தேசிய நலன்கள் இலங்கையின் தேசிய நலன்களோடு அதிலும் குறிப்பாக சிங்களவர்களின் நலன்களோடு எதிர்பாராத விதத்தில் இணைந்தது என்று கருதுவது தவறானதாகும். அத்தோடு ஒரு நலன்புரி பிரிவோடு இஸ்ரேலியர்கள் திருப்தி அடைவார்கள் எனக் கருதுவது மீண்டும் தவறானதாகவே இருக்கும். அந்தப் பிரிவோடு மட்டும் அவர்கள் எமது நலன்களில் விசுவாசத்தோடு பணி புரிவார்கள். நாம் திரும்பிப் போகச் சொன்னதும் அவர்கள் கௌரவமாக வெளியேறி விடுவார்கள் என்று கருதுவதும் தவறானதே.

 இஸ்ரேலிய வெளியுறவு கொள்கையின் மூலாதாரமே மற்றெல்லாவற்றையும் விட இஸ்Nலிய நலன்களே முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்பது தான். அதுதான் அவாகளுக்கு முக்கிய சோதனை. எந்த விலை கொடுத்தேனும் இதை அடைய அவர்கள் முயலுவார்கள். இஸ்ரேலின் 'ஆசியா கனவும்' அதுவாகவே உள்ளது. இஸ்ரேலுக்கும் பர்மாவுக்கும் இடையிலான வெற்றிடத்தை நிரப்ப இந்தியாவில்; ராஜதந்திர கேந்திர நிலையம் ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளின் முக்கிய நோக்கமும் இதுவே' என்று கூறினார்.

கடைசியாக 1990 ஏப்பரல் 20ல் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச இஸ்ரேல் நலன்புரி நிலையத்தை இழுத்து மூட முடிவு செய்தார். அத்தோடு இஸ்ரேலுடனான ராஜதந்திர உறவுகளும் துண்டிக்கப்பட்டன.

மீண்டும் 1996ல் இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரகசிய பேச்சுவார்த்தைகள் தொடங்கின. அப்போதைய வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் புது டில்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது புதுடில்லியில் உள்ள இஸ்ரேலிய தூதுவர் அவரைப் பார்வையிட மருத்துவ மனைக்குச் சென்றார். அவரை அங்கு அழைத்துச் சென்றவர் அப்போது இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராக இருந்த ஷிவஷங்கர் மேனன். மேனன் கொழும்பில் கடமைகளைப் பொறுப்பேற்க முன் இஸ்ரேலில் இந்தியாவின் தூதுவராக இருந்தவர். 

இந்த சந்திப்பில் இந்தியாவின் அன்றைய வெளியுறவு செயலாளரும் பங்கேற்றிருந்தார். தகவல் அறிந்த சில வட்டாரங்களின் கருத்துக்கள் படி இஸ்ரேல் தூதுவர் அதன் பிறகும் அடிக்கடி பல தடவைகள் லக்ஷ்மன் கதிர்காமரை ஆஸ்பத்திரியில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்புக்களின் போது இடம்பெற்ற இரகசிய பேச்சுவார்த்தைகளின் பலனாக 2000 மாம் ஆண்டு ஜுன் மாதம் இலங்கை இஸ்ரேல் உறவுகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டன.

ஆனால் இஸ்ரேல் இலங்கைக்கு செய்த ஒரே கைமாறு விடுதலைப் புலிகளையும் இலங்கை இராணுவத்தையும் ஒரே பயிற்சி முகாமுக்குள் வைத்து ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் இரு தரப்புக்குமே பயிற்சி அளித்ததாகும்.

இஸ்ரேலின் வருகையானது இனங்களுடனான தமது நல்லுறவை பாதிக்கும் எனவும் இன முரண்பாட்டை மேலும் சிக்கலாக்கும் என்றும் முஸ்லிம்கள் அன்றே அஞ்சினார்கள். ஒரு காலத்தில் கிழக்கில் நல்லிணக்கம் சமாதானம் மற்றும் புரிந்துணர்வோடு வாழ்ந்த தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் விரிசலை உருவாக்குவதில் இஸ்ரேல் பாரிய பங்களிப்புச் செய்துள்ளது என்று ஏற்கனவே பரவலான குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

இந்த உறவுகளின் உச்ச கட்டமாக 2008ல் அப்போதைய பிரதமர் றட்ணசிறி விக்கிரமநாயக்க இஸ்ரேலுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரும இன்னும் பலரும்; அடுத்தடுத்து இஸ்ரேலுக்கான விஜயங்களைத் தொடர்ந்தனர்.

எதிர்ப்பார்க்கப்பட்டது போலவே இந்த நாட்டில் இஸ்ரேல் எல்லாப் பிரிவுகளிலும் அதன் விதைகளைத் தூவிவிட்டது. கடந்த காலங்களைப் போலன்றி இஸ்ரேலுக்கான கதவுகளைத் திறந்து விட்டுள்ளதன் மூலம் முஸ்லிம் சமூகத்தையும் அதன் உணர்வுகளையும் கண்ணீரையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் மாறி மாறி தனித்தனியாகவும் கூட்டாகவும் புறக்கணித்துள்ளன. முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களும் நடவடிக்கைகளும் ஏற்கனவே தலைதூக்கி விட்டன. ஆனால் அரசாங்கமோ இனவாதிகளுக்க இடமளித்து வேடிக்கை பார்த்து நிற்கின்றது. இந்த நாட்டுக்குள் குழப்பங்களை ஏற்படுத்த வெளிநாட்டுக் கூலிப்படைகள் சுதந்திரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -