யாருடையவும் தேவைக்காகவும் அவசரமாக சட்டத்தை அமுல்படுத்த முடியாது -பொலிஸ் மா அதிபர்

யாருடையவும் தேவைக்காக அவசரமாக முந்தியடித்துக் கொண்டு சட்டத்தை அமுல்படுத்துவதற்கு தமக்கு எந்தவித தேவையும் இல்லையெனவும், சாட்சி, தடங்களுடன் குற்றத்துடன் சம்பந்தப்பட்டவர் சிக்கினால், சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவோம் எனவும் பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் முஸ்லிம்களுடைய கடைகளை தீவைக்கும் நிகழ்வு இடம்பெறுகின்றது. இதற்கான நடவடிக்கை குறித்து அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சட்டம் சகலருக்கும் சமன். ஒரு குற்றச் செயல் இடம்பெறும் போது அதற்கு இனச்சாயம் பூசிப் பார்க்க வேண்டாம். எந்தவொருவருக்கும் தேவையான மாதிரி தாம் அவசரமாக செயற்பட்டு, யாரையும் திருப்திப்படுத்த வேண்டிய தேவை தமக்கு இல்லை.

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது அவர் பௌத்தரா? முஸ்லிமா? என்பதை பார்க்க மாட்டோம். நேற்றும் ஒரு தீ வைப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. எமது நாட்டில் இடம்பெறும் முக்கிய விடயம் ஒன்றுதான், ஏதாவது ஒரு நிகழ்வு நடந்தால், அதனை தூக்கி பொலிஸின் மீது போட்டு விடுகின்றனர். எம்மிடம் விசேட தன்மைகள் ஏதும் கிடையாது. நாம் சட்டத்தை சரியாக நிறைவேற்றுவோம். யாருடையவும் தேவைகளுக்கு எமக்கு அவசரப்படுவதற்கும் ஓடுவதற்கும் முடியாது எனவும் பொலிஸ் மா அதிபர் மேலும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -