கல்குடா: ஷியாவின் அலுவலகம் பொதுமக்களால் அடித்துடைப்பு - 03வர் காயம்

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-

ஷியா முஸ்லிம் பிரிவினருடைய இஸ்லாமிய கல்வி கலாச்சார நிலையமானது (Islamic Education Cultural Center) நிலையமானது பொதுமக்களால் அடித்து உடைக்கப்பட்ட சம்பவம் மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா, ஓட்டமாவடி மீராவோடை ஆலிம் வீதியில் நேற்று 08.062017 இஸா தொழுகைக்கு பின்னர் இடம் பெற்றது. 

கல்குடா பிரதேசத்தில் அதிகரித்து வருகின்ற ஷியா முஸ்லிம்களின் ஆதிக்கம் காரணமாகவும், குறித்த பிரதேசத்தில் இயங்கிவருகின்ற இஸ்லாமிய கல்வி கலாஸ்சார நிலையமானது இஸ்லாமிய அகீதாவிற்கு முரண்பாடான முறையில் கொள்கையினை பரப்பி வருகின்றமையும், இந்த ரமழான் மாதத்தில் தேவைக்கு அதிகமான ஒலி பெருக்கிகள் பாவிக்கப்படுவதும், இன்று வெள்ளிக்கிழமை 09.06.2017 குறித்த நிலையத்தில் புதிதாக ஜும்மா தொழுகை இடம் பெறவுள்ளமையுமே நிலையம் உடைக்கப்பட்டமைக்கு முக்கிய காரணம் என பரவலாக பேசப்படுகின்றது.

மேலும் குறித்த விடயம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுனவின் தலைமையில் சம்பவம் இடம் பெற்ற இடத்திற்கு உடனே சமூகமளித்த பொலீஸ் குழுவினரும், புலனாய்வு பிரிவினரும் விசாரனைகளை ஆரம்பித்துள்ள அதே நேரத்தில். கல்குடா பிரதேசத்தில் ஷியா முஸ்லிம் பிரிவினரின் இன்னுமொரு முக்கிய தளமாக காணப்படுகின்ற மீராவோடை மன்பஹுல் ஹுதா அறபு கல்லூரிக்கும் மேலதீக பாதுகாப்பு உடனே வழங்கபட்டு பொலீசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட மூவர், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதவும் 

உடைப்பு சம்பவம் இடம் பெற்றதற்கு இஸ்லாமிய கல்வி கலாச்சார நிலையத்தின் தற்போதைய நிலவரம் சம்பந்தமான காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -