கோச்சியில் ஒரு கோரக் கொலை..!

கோச்சியில் ஒரு கோரக் கொலை
+++++++++++++++++++
Mohamed Nizous

கோச்சில மகன் போனான்
கொண்டாட உடுப்பெடுக்க
போச்சி உசிரெண்டு
புலம்புவது கேட்கிறதா?

ஓதிப் படிச்ச புள்ள
ஓடிஆடித் திரிந்த புள்ள
சாதி வெறி பிடிச்ச இந்த
சதிக் கூட்டம் கொண்ணுப்புட்டு.

மாட்டின் பெயராலே
மனுசனக் கொல்லுறியா?
ஊட்டுல கேட்டுப் பாரு
உன்னப் பெத்தா மாட்டுக்கா?

குடிகார நாய்க் கூட்டம்
குதறி எறிவதற்கு
அடிப்படைக் காரணம்
ஆட்சி செய்யும் வெறியரே

உடுப்பெடுக்க போன புள்ள
ஊட்டுக்கு வருவாண்ணு
அடுப்படியில் காத்திருந்தா
அடிச்சு கொன்னு போட்டியடா

என்ன பாவம் செஞ்சாண்ணு
இந்தப் புள்ள கொன்னீங்க
சின்ன மகன் இறப்பால
சிந்தும் கண்ணீர் நெருப்பாகும்

நெருப்பொரு நாள் பரவும்
நீசர்களை அழிக்கும்
கருப்பாடு ஒழிந்து போகும்
காத்திருப்போம் அதற்காக
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -