கொழும்பு, மருதானை முஸ்லிம் ஹொட்டலுக்கு தீ வைப்பு

கொழும்பு, மருதானை, மாளிகாகந்தை வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் உரிமையாளருக்கு சொந்தமான ஹோட்டலில் நள்ளிரவில் தீ பிடித்துள்ளது!

ஹோட்டலின் பின்பகுதியினால் ஏதேனும் தாக்குதல் மேற்கொள்ள பட்டிருக்கலாமென சந்தேகிக்கப் படுகிறது! கடந்த 07 நாட்களாக குறித்த வர்த்தக நிலையம் மூடப்பட்டிருந்த நிலையில் வர்த்தக நிலையத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

இக்கடையினுள் கேஸ் சிலின்டர் வெடிப்போ மின்சார கசிவு ஏற்படவில்லை என்பது ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.தாக்குதலுக்கு உள்ளான ஹோட்டலுக்கு அருகில் 12.30 மணியளவில் சந்தேகத்திற்கு இடமாக 03 இளைஞர்கள் நின்றமையும் இவ் வர்த்தக நிலையத்திற்கு அருகில் நடமாடியமையும் தெரியவந்துள்ளது.

ஹோட்டலில் பலத்த தீ வெளியானமையினால் சம்பவ இடத்திற்கு உடன் வருகை தந்த தீயணைப்பு படையினர் தீ யினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.மருதானை பொலிசார் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -