சம்மாந்துறையில் பெண்களுக்கான மாபெரும் இப்தார் நிகழ்வும் உதவு தொகை வழங்கலும்!எம்.வை.அமீர்-

கில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியூதீனுடைய வழிநடத்தலின்கீழ் அக்கட்சியின் பிரதித் தவிசாளரும் லக்சல நிறுவனத்தின் தலைவரும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமான கலாநிதி எஸ்.எம்.எம்.எம்.இஸ்மாயிலின் ஏற்பாட்டில் பெண்களுக்கான மாபெரும் இப்தார் நிகழ்வும் பாடசாலை மாணவர்களுக்கு உதவுதொகை வழங்கும் நிகழ்வும் சம்மாந்துறை தாறுல் சலாம் வித்தியாலய திறந்த வெளியரங்கில் 2017-06-23 ஆம் திகதி இடம்பெற்றது.

பெண்கள் சிறுவர்கள் என இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் பங்குகொண்டிருந்த இந்நிகழ்வுக்கு கலாநிதி எஸ்.எம்.எம்.எம்.இஸ்மாயில் தலைமை வகித்ததுடன் மாணவர்களுக்கு உதவுதொகைகளையும் வழங்கிவைத்தார்.

முழுக்க முழுக்க பெண்கள் மற்றும் மாணவர்களை மையப்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் சம்மாந்துறையைச் சேர்ந்த 40 க்கு மேற்பட்ட மாதர் அமைப்புக்களில் இருந்து பெண்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கலாநிதி எஸ்.எம்.எம்.எம்.இஸ்மாயிலின் ஏற்பாட்டில் அண்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியூதீனுடைய பங்குபற்றுதலுடன் சுமார் 7000ஆண்கள் பங்குகொண்ட இப்தார் நிகழ்வு ஒன்று நடாத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -