வெள்ளவத்தை வை.எல்.எஸ். பங்களா! பணம் எங்கிருந்து வந்தது?

ஏ.எச்.எம். பூமுதீன்-

மைச்சர் ரிஷாத் பதியுதீனை விமர்சிப்பதையே நிரந்தர தொழிலாக கொண்டுள்ள வை.எல்.எஸ். ஹமீத் - அடிக்கடி உச்சரிக்கும் சொல் ஷொப்பிங் பேக்குடன் வந்த ரிஷாத் என்பது.
அமைச்சர் ரிஷாத் மட்டுமல்ல ஒட்டுமொத்த வடக்கு முஸ்லிம்களும் அதே பேக்குடன்தான் விரட்டப்பட்டார்கள்.

வை.எல்.எஸ்ஸின் கருத்துப்படி, வடக்கு முஸ்லிம்கள் - அவர்கள் மரணிக்கும் வரை அதே பேக்குடன் பிச்சை எடுத்து , வை.எல்.எஸ். போன்றோருக்கு அடிமையாக வாழ வேண்டும் என்றா நினைக்கிறார்.

இலங்கையில் புகழ் பெட்ட கொடைவள்ளல் - மிகப்பெரும் செல்வந்தர் மர்ஹூம் நளீம் ஹாஜியாரின் ஆரம்ப தொழில் கோழி முட்டை விட்பது. பின்னர் அவரது அயராத முயட்சியால் பெரும் செல்வந்தரானார். சமூகத்துக்கு பெரும் பங்காற்றினார்.

வை . எல்.எஸ்ஸின் கூற்றுப்படி நளீம் ஹாஜியாரும் -அவர் மரணிக்கும் வரை முட்டையே வித்துக்கொண்டு இருந்திருக்க வேண்டும் என்றா கூற முனைகின்றார்.

அது ஒருபுறம் இருக்க, வெள்ளவத்தையில் வை.எல்.எஸ். நிர்மாணித்துள்ள விசாலமிக்க இரெண்டு மாடிகளைக் கொண்ட பங்களாவை நிர்மாணிக்க எங்கிருந்து பணம் வந்தது.

சாதாரண குடும்பத்தில் பிறந்த - ஆங்கில ஆசிரியரான ஹமீதினால் எப்பிடி இவ்வளவு பெரிய பங்களாவை கட்ட முடிந்தது என்று எப்போதாவது நாம் கேள்வி எழுப்பி இருந்தோமா? இல்லையே..

மர்ஹூம் அஷ்ரப்புடன் இருந்த காலத்தில் , அவரிடம் கொள்ளையிட்ட பணத்தில் பங்களா கட்டினீர்களா? அல்லது ரிஷாத் பதியுதீனுடன் இருந்த நேரம்- அவரிடம் கொள்ளையிட்டு கட்டினீர்களா? இதட்கு எப்போது பதில் தருவீர்கள்.

உங்களுக்கு கட்பனையில்தான் கேள்வி கேட்க தெரியும். எங்களுக்கு- ஆதாரத்தோடு , நியாயமாக கேட்க தெரியும் என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள்.

வெள்ளவத்தையில் உங்களுக்கு பங்களா இருப்பது - உங்களுக்காக வசை பாடுவோருக்கு தெரியுமா?

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இதுவரை சுமார் 2000 - 3000 வரை தொழிவாய்ப்பை மட்டும் வழங்கியுள்ளார். அவர்கள், அமைச்சர் ரிஷாதுக்கு எதிராக வை.எல்.எஸ்ஸை போன்றோர் அநியாயத்துக்கு விமர்சிக்கும்போது வசைபாடத்தான் செய்வார்கள். அப்பிடியொரு இளைஞ்சர் கூட்டத்தை - ஹமீது தேடிக்கொள்ளாதது அவர் விட்ட தவறு.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருடன் 13 வருடங்கள் இருந்த இந்த வை.எல்.எஸ். - ஒரு மலசல கூடத்தைக்கூட கல்முனை தொகுதியில் கட்டிக்கொடுக்க முன்வராதபோது எப்பிடி அவருக்கு மக்கள் ஆதரவு பெருகும்.? மக்கள் ஆதரவு கிஞ்சித்தும் இல்லாத அவருக்கு
எப்பிடி தேசியப்பட்டியல் நியமனம் வழங்க முடியும்.
இறுதியாக ஒரு விடயம்..

வை.எல்.எஸ். ஹமீதிடம் ஒரே ஒரு கேள்வி.

இஸ்லாம், அகீதா என்றெல்லாம் பேசும் நீங்கள்- ஒரு வருடம் , அமைச்சர் ரிஷாத்தை விட்டு பிரிந்து- அவரை பகிரங்கமாக விமர்சித்தவேளை, அமைச்சர் ரிஷாத் வழங்கிய அசோக் லேலண்ட் நிறுவனத்தில்தானே இருந்தீர்கள். அங்கு லட்சக்கணக்கில் மாத சம்பளம் பெற்றுக்கொண்டுதானே இருந்தீர்கள். இது ஒரு முனாபிக் தனம் இல்லையா? அவ்வாறு நீங்கள் விமர்சித்தபோதும் கூட, அமைச்சர் உங்களை பதவியை விட்டும் தூக்கவில்லையே. நன்றிகெட்டத்தனம் செய்தது நீங்களா? அமைச்சரா?

நீங்கள் உண்மையாக அல்லாஹ்வுக்கு பயப்படுபவராக இருந்தால், அந்த ஒருவருடமும் நீங்கள் எடுத்த சம்பளம், வாகனத்துக்கான பெற்றோல் கொடுப்பனவு, ஏனைய சலுகைக் கொடுப்பானுவுகளை சரியாக கணக்கெடுத்து அமைச்சுக்கு திருப்பி கொடுத்துவிட்டு உங்களின் 
அங்கம்-2 ஐ தொடருங்கள் பாப்போம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -