சிங்கள மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ள சாரா பஷீர் 17 வயது முஸ்லீம் மாணவி


அஸ்ரப் ஏ சமத்-

ஸாரா வஸீர், இவர் கல்கிஸ்ஸை பகுதியை சேர்ந்த பதின் ஏழே வயதான ஒரு நடுத்தர முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த சகோதரி, இப்போது சகோதர சிங்கள சமூகத்தில் அதிகம் பேசப்படும் ஒரு முன்மாதிரி யுவதியாக திகழ்கிறார், facebook இல் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றது, இவர் அப்படி என்னதான் சாதித்துவிட்டார்? என்று நீங்கள் கேட்பது புரிகின்றது, சிரச சிங்கள தொலைகாட்சி சேவையில் ஒளிபரப்பாகும் ”ஒபத லக்ஷபதி” (Millionaires) என்கிற நிகழ்ச்சியில் கடந்த வாரம் பங்குகொண்டு 125,000 ரூபாவை வென்று முழுத்தொகையையும் இலங்கை மகரகம புற்று நோய் வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார், இது உண்மையில் பாராட்டப்பட வேண்டிய அம்சமாகும், இதன் மூலம் இயலாதவர்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளை வழங்க வேண்டும் என்கிற உறுதியான செய்தியை அனைவருக்கும் எத்தி வைத்திருக்கிறார்! எதிர்கால இலட்சியமாக ஒரு சட்டத்தரணியாக வர வேண்டும் என கூறியுள்ளார்.
அவரின் இலட்சியம் வெற்றிபெற நாமும் பிரார்த்திப்போம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -