அரச சேவையில் அரசியல் பழிவாங்கும் கலாசாரத்தை நிறுத்துவோம் - அமைச்சர் மத்தும பண்டார


கஹட்டோவிட்ட ரிஹ்மி-

"கடந்த காலங்களில் அரச சேவையானது அரசியல் மயப்படுத்தப்பட்டது. அதே போன்று எதிர்த்த ஊழியர்கள் பழிவாங்கப்பட்டனர். அதற்குள் அரச சேவையில் பாரிய அரசியல் பழிவாங்கல் நடைபெற்றுள்ளது. சில நிறுவனங்களில் இது விஸ்வரூபம் எடுத்திருந்தது. ஆயிரக்கணக்கான ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். இன்று அந்த நிலைமை மாறியிருப்பதுடன், சென்ற அரசில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். 

அந்தந்த அமைச்சுக்களில் ஏற்பட்ட அநீதிகளைத் தேடி அறிவதற்கு ஒரு குழுவை அமைத்துள்ளோம். அந்தக் குழு பல்வேறு பரிந்துரைகளை எமக்கு வழங்கியுள்ளது. அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சுதான் இதனை செய்கிறது. தற்போதைக்கு அந்தந்த அமைச்சுக்களில் இருந்து வந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. என்றாலும் சிலர் இதற்கு இணங்காத காரணத்தால் ஓய்வூதியம் பெறும் ஊழியர்கள் மூவர் அடங்கிய ஒரு குழுவை ஜனவரி 01 இல் நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டது" என்று அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் தெரிவித்தார். 

இதுவரை இக்குழுவிற்கு 1000 இற்கும் அதிகமான தீர்க்கப்பட முடியாத பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அந்தந்த அமைச்சுக்களில் காரணங்களை விசாரித்தரிந்து சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு இணங்க மறுத்தல் மற்றும் குழுவினால் சமர்ப்பிக்கப்படாத பரிந்துரைகள் 700 அளவில் உள்ளன. இதுவரை கிடைக்கப்பெற்ற பரிந்துரைகளில் அதிகமானவை கனிய, எண்ணெய் வள அமைச்சு, போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றிலிருந்தாகும். இந்த மூவரடங்கிய குழு 2017 ஜனவரி 16 இல் இருந்து 3 மாத காலத்திற்குள் கபினெட் அனுமதியுடன் நியமிக்கப்பட்டதுடன் ஏப்ரல் 16 ஆகும் போது 1100 முறைப்பாடுகள் அளவில் அறியப்பட்டுள்ளது. இவ்வாறு முதல் 3 மாதங்களுக்குள் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் சம்பந்தமாக, இது தொடர்பில் நடைபெறும் முதலாவது அமைச்சரவைப் பத்திரத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்க நிர்வாக அமைச்சு தீர்மானித்துள்ளது. 

குழுவினது காலம் ஏப்ரல் 16 முடிவடைந்தாலும் மேலும் பல பணிகள் நிறைவடையாது உள்ளதால், மீண்டும் 3 காலம் இக்குழு இயங்குதவற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. இந்த 3 மாதங்களுக்குள் தீர்க்கப்படாத பரிந்துரைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மத்தும பண்டார வேண்டுகோள் விடுத்தார். அதன் பின்னர், இப்பரிந்துரைகளை 2வது அமைச்சரவைப் பத்திரம் மூலம் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை முடிவுறுத்தப்பட்டுள்ளதுடன், குறிப்புக்கள் முடிவுறுத்தப்பட்டு அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பான கபினட் முடிவுகளை சுற்றுநிருபங்கள் மூலம் அந்தந்த அமைச்சுக்களுக்கு அனுப்ப அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தீர்மானித்துள்ளது.

இம் மூவரடங்கிய குழுவின் தலைவராக ஓய்வூதியம் பெற்ற சிரேஷ்ட அலுவலர் டப்ளியூ பிரேமதாசவும், ஜீ.பீ.டி.சோமரத்ன மற்றும் ஏ.டப்ளியூ.பதிராஜ ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாகவும் செயற்படுகின்றனர். 

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -