அப்துல்சலாம் யாசீம்-
பட்டதாரிகளுக்கும் தொண்டராசிரியர்களுக்கும் வேலை வழங்க கூடாதென்று கூறுவதற்கு நான் பிசாசு குணம் கொண்டவன் அல்ல. மத்திய அமைச்சு எதை பணிக்கின்றதோ அதை நிறைவேற்றுவதற்கு நான் தயாராகவுள்ளேன் என தெரிவித்தார் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்ணான்டோ!
வேலையற்ற பட்டதாரிகளுக்கும் தொண்டராசிரியர்களுக்கும் நியமனம் வழங்குவதற்கு கிழக்கு மாகாண ஆளுனர் தடையாக இருக்கின்றார் என்ற தவறான கருத்தை தமிழ் பத்திகைகள் வௌியிட்டு வருகின்றன என்ற செய்திகளுக்கு பதில் கூறுமுகமாக ஆளுனர் ஆவர்களினால் இன்று (06) செவ்வாய்கிழமை மாலை
கூட்டப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்ணான்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் விளக்கமளிக்கையில்
கிழக்கு மாகாணத்தில் 4400 பட்டதாரிகள் வேலையற்று இருப்பதாக சில் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதேவேலை பிரதிப்பிரதம செயலாளரின் தகவலின் படி கிழக்கு மாகாணத்தில் 6000 பட்டதாரிகள் வேலையற்று காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவருக்கும் நியமனம் வழங்குவதில் கிழக்கு மாகாண சபை பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றது. வேலையற்றிருக்கும் பட்டதாரிகளில் பெருந்தொகையானோர் கலைப்பட்டதாரிகளாகவே காணப்படுகின்றார்கள். ஆனால் இவர்களுக்கு வேலை வழங்கும் அளவுக்கு ஆளனிப்பற்றாக்குறை காணப்படவில்லை.
ஆசிரியர் ஆளனியிலும் கணிதம் விஞ்ஞானம் ஆங்கிலம் தகவல்தொழிநுட்பம் ஆகிய பாடங்களுக்கே நியமனம் வழங்கக்கூடிய நிலை காணப்படுகின்றது.ஏனைய பாடங்களில் கிழக்கு மாகாணத்தில் மேலதிக ஆசிரிய நிலை காணப்படுவதினால் நியமனங்களை வழங்க முடியாதிருக்கின்றது. பட்டதாரிகளோ தங்களுக்கு போட்டிப்பரீட்சைகளை நடாத்தாமல் நியமனங்களை வழங்குங்கள் என்று கூறுகின்றார்கள் அதேவேலை வயதெல்லைகளை அதிகரிக்குமாறு கோருகின்றார்கள்.மற்றும் பயிலுனர்களாக நியமியுங்கள் என கோருகின்றார்கள் இவற்றை செய்யும் அதிகாரம் மத்திய அமைச்சுக்கு உள்ளதே தவிர எனக்கு அந்த அதிகாரம் தரப்படவில்லையெனவும் கிழக்கு மாகாண ஆளுனர் தெரிவித்தார்.
தொண்டராசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதில் அனுமதியை வழங்காமல் இழுத்தடிப்பு செய்கின்றார் கௌரவ ஆளுனர் என குற்றம் சாட்டுகின்றார்கள். கிழக்கு மாகாணத்திலுள்ள தொண்டராசிரியர்கள் பற்றிய தகவல்கள் முறையாக சேகரிக்கப்படவில்லை.445 ஆசிரியர்கள் கடமையாற்றுவதாக கூறப்படுகின்றது. இதில் 25 வீதமான ஆசிரியர்கள் மூதூர் வலயத்தை சேர்ந்தவர்கள் ஏனைய 75 வீதமானவர்களே 14 கல்வி வலயங்களில் தொண்டாற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுக்குறிய நியமனத்தை வழங்குவதற்கு முன் மீண்டும் ஏனைய தொண்டராசிரியர்கள் பற்றிய தகவல்களை சேகரியுங்கள் என நான் பணித்த போதும் அத்தகவலை பெறுவதற்கு அதிகாரிகள் விரும்புகின்றார்கள் இல்லை.இருந்தபோதிலும் அமைச்சரவையின் தீர்மானத்திற்கமைய கிழக்கு மாகாணத்தில் தொண்டராசிரியர்களாக கடமையாற்றுகின்றவர்களுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 13ம் 14ம் திகதிகளில் நேர்முகப்பரீட்சையை வைத்து நியமனங்களை வழங்குவதற்குறிய ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அதேவேளை 1770 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதனடிப்படையில் விஞ்ஞானம் கணிதம் ஆங்கிலம் எச்,என்.டி ஆங்கில டிப்ளோமா மற்றும் வரலாறு போன்ற ஆசிரிய நியமனங்களை விரைவில் வழங்குவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக கிழக்கு ஆளுனர் ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்தார்.