பொதுபல சேனாவுக்கு எதிராக எந்த பிடியாணையும் இல்லை - அம்பலப்படுத்திய BBS

பொதுபல சேனா செயலாளர் ஞானசாரவைக் கைது செய்ய இதுவரை எந்த நீதிமன்றமும் பிடியாணை எதுவும் பிறப்பிக்கவில்லையென நிராகரித்துள்ளது அவ்வமைப்பு. 

இவ்வார அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் வைத்து, ஞானசாரவுக்கு எதிராக நீதிமன்ற பிடியாணை இருப்பதாகவும் அதனடிப்படையில் அவர் தேடப்படுவதாகவும் ராஜித தெரிவித்திருந்தார். எனினும் அவர் பொய் சொல்வதாகவும் அவ்வாறு எந்த நீதிமன்றமும் உத்தரவிடவில்லையெனவும் பொது பல சேனா தெரிவித்துள்ளது. இந்நிலையில், நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் எதிர்வரும் 12ம் திகதி ஞானசாரவுக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. 

பொலிசார் முஸ்லிம் அரசியல்வாதிகளைத் திருப்திப் படுத்தவே அவரைக் கைது செய்ய முயல்வதாகவும் அவ்வமைப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் அண்மையில் குருநாகலில் பொலிசார் மேற்கொண்ட முயற்சியும் கேலிக்கூத்தாக மாறியிருந்தமையும் கடந்த வருடம் நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றின் அடிப்படையிலேயே கைது செய்ய முயன்றதாக அவ்வேளையில் பொலிசார் விளக்கமளித்திருந்தமையும் நினைவூட்டத்தக்கது.

இதேவேளை, நாட்டில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் ஞானசாரவே இருப்பதாக ராஜித தெரிவிக்கின்ற போதிலும் அவ்வாறு எந்தவொரு பொலிசிலும் எந்த முறைப்பாடும் இல்லையெனவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Moor
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -