டொமினி ஜீவா அவர்களின் 90 வது பிறந்த தினம் வைபவம் - 27.06.2017

டொமினி ஜீவா அவர்களின் 90 வது பிறந்த தினம் வைபவம் 27.06.2017 கொழும்பில் மட்டக்குளியில் அவரது மகன் திலீபன் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஜீவா அவர்கள் மீதான அபிமானக் கொண்ட கலை இலக்கிய நண்பரகள் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினர்.

அத்தோடு தொலைபேசி மூலமும் பல நண்பர்கள் வாழ்த்தினர்.

முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ,எச்,எம்,அஸ்வர், வெளிப்பனை அத்தாஸ், பிரமீளா பிரதீபன், கே.எஸ்.சிவகுமாரன் ,தெளிவத்தை ஜோசப், அந்தனி ஜீவா, கலாநிதி ந.ரவீந்திரன், பேராசிரியர் மா.கருணாநிதி, மு.தயாபரன், ச.முருகானந்தன், ஞானம் ஆசிரியர் தி.ஞானசேகரன், கே. பொன்னுத்துரை, செல்வம், தேசம் பத்திகையாளர் சதீஸ், ஏ.எஸ்.எம். நவாஸ், வீரகேசரி சங்கமம் ஜீவா சதாசிவம், வதிரிசி.ரவீந்திரன், துரைவி ராஜ்பிரசாத் துரை விஸ்வநாதன், நடராஜன், இரா.சடகோபன், மற்றும் சிங்கள எழுத்தாளர் கமல் பெரேரா, ஸ்ரீரதரசிங், பூபாலசிங்கம், அட்டாளைசேனை முஹமது நௌபல் போன்ற பலர் கலந்து கொண்டனர்.

மேமன்கவி திலீபன் டொமினிக் ஜீவா ஆகியோரின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் ஜீவா அவர்களின் 90 வது பிறந்த தினத்தினை முன்னிட்டு மேமன்கவி தொகுத்த ''ஜீவா பதிவுகள்-90'' ஆவணத்தொகுப்பின் சிறப்புப் பிரதி மேமன்கவி, தீலீபன் ஆகியோரால் ஜீவா அவர்களுக்கு கையளிக்கப்பட்டது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -