இரண்டாவது நாளாகவும் தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு..!

க.கிஷாந்தன்-
ன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொடர்ச்சியான வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மலையகத்தில் உள்ள அஞ்சல் அலுவலக பணியாளர்களும் 28.06.2017 அன்று இரண்டாவது நாளகவும் அடையாள வேலை நிறுத்தத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளனர்.

மூன்று அம்சக்கோரிக்கைகளை முன் வைத்து நாடு முழுவதும் உள்ள தபால் ஊழியர்கள் ஏற்கனவே திட்டமிட்ட படி 26.06.2017 அன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்திருந்தனர்.

நுவரெலியா, கண்டி, காலி ஆகிய தபாற் காரியலாயங்களை உல்லாச பயணத்துறைக்கு பயண்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்புத்தெரிவித்தும், கொழும்பு பிரதான தபால் காரியாலய கட்டிடத்தில் மீண்டும் தபால் காரியாலயத்தை ஆரம்பிக்காமை, ஊழியர் சட்ட மூலத்தை திருத்தி நடமுறைப்படுத்தாமை உள்ளிட்ட நிர்வாகத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலே குறித்த அடையாள வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொடர்ச்சியான வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மலையகத்தில் நுவரெலியா, அட்டன், தலவாக்கலை, கொட்டகலை ஆகிய பிரதான அஞ்சல் அலுவலகம் மற்றும் உப அஞ்சல் அலுவலகங்கள் போன்றவற்றில் கடமையாற்றுகின்ற பாணியாளர்கள் இரண்டாவது நாளாக 28.06.2017 அன்றும் காலை முதல் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக மலையகத்தில் உள்ள அஞ்சல் அலுவலகங்கள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இதனால் பல்வேறு தேவைகளுக்காக அஞ்சல் அலுவலகங்களுக்குச் செல்லும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -