திருகோணமலையில் மீண்டும் டெங்கு - ஐந்து நாட்களுக்குள் 18 பேர் பாதிப்பு

அப்துல்சலாம் யாசீம்-
ஜூன் முதலாம் திகதி முதல் இன்று (05) திகதி வரைக்கும் 18 பேர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் அனூசியா ராஜ்மோகன் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் டெங்கு நோய் பரவி வருவதினால் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் சுற்றுப்புர சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறும் பணிப்பாளர் அனூசியா ராஜ்மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உப்புவௌி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குற்பட்ட பாலையூற்று,செல்வநாயகபுரம்.ஆண்டாங்குளம்,வில்கம பகுதிகளிலும் குச்சவௌி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குற்பட்ட நிலாவௌி இக்பால் நகர் பகுதியிலும் கன்தளாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குற்பட்ட பாதியகம பகுதியிலும் டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

ஆகவே மீண்டும் திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோய் பரவாமல் இருப்பதற்காக பொதுமக்கள் மிகவும் அவதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டுமெனவும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் அனூசியா ராஜ்மோகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -