அட்டாளைச்சேனையில் SLMCயின் மாபெரும் இப்தார் நிகழ்வு - அனைவருக்கும் அழைப்பு

சப்னி அஹமட்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும், மத்திய குழுவின் தலைவரும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் அவர்களின் அனுசரனையிலும், அட்டாளைச்சேனை மத்திய குழுவின் ஏற்பாட்டில் மாபெரும் வருடாந்த இப்தார் நிகழ்வு எதிர்வரும் 16ஆம் திகதி அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் இடம்பெறவுள்ளது. என இன்று (05) இடம்பெற்ற அட்டாளைச்சேனை மத்திய குழுவின் கூட்டத்திலும், இப்தார் நிகழ்விலும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம்  றிஸ்வி சின்னலெப்பை, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மர்ஹூம் மசூர் சின்னலெப்பை ஆகியோருக்கான துஆப்பிராத்தனையுடன் இப்தார் நிகழ்வு இடம்பெற்றவுள்ளது. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாகவும், அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட், பிரதியமைச்சர்களான பைஷல் காசீம், எச்.எம்.எம் ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், பாராளுமன்ற ,மாகாண சபை உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், உலமாக்கள், பெரியோர்கள் எனபலரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

அத்துடன், கட்சியினாலும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரினாலும் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் தொடர்பாகவும் அட்டாளைச்சேனையில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி தொடர்பாகவும் மத்தியகுழு உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டதுடன், பல திட்டங்கள் தொடர்பாகவும் ஆராய்ப்பட்டது. ஆகவே, குறித்த இப்தார் நிகழ்வுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் போராளிகளை கலந்துகொள்ளுமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எல். முஹம்மட் நஸீர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -