அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை மாவட்ட ரண விரு சேவா அதிகார சபையின் வைத்திய முகாம் இன்று (05) திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது . பாதுகாப்பு படையில் சேவையாற்றிய வீரர்களின் குடும்பத்தவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் .கண் பல் இரத்த பரிசோதனை மாற்று ஆயுள் வேத வைத்திய பரிசோதனைகளும் நடைபெற்றதுடன் ரன்வீர குடும்பத்தினர்களின் பிரச்சினைகளும் இங்கு ஆராயப்பட்டன .
ரன்விரு சேவா அதிகார சபையின் தலைவி திருமதி அனோமா பொன்சேகா திருகோணமலை மாவட்ட அதிகாரி ஆளக பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர் அனோமா பொன்சேகா வைத்திய சிகிச்சையை பார்வையிடுவதையும் சிகிச்சை பெரும் ரன்வீர குடும்பத்தையும் காணக்கூடியதாக உள்ளது.