வடக்கு மற்றும் கிழக்கில் 04 இலட்சம் பேருக்கு நீர் இல்லாத நிலை..!!

நாட­ளா­விய ரீதியில் வரு­டத்தின் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் பதி­னொரு மாவட்­டங்­களில் வாழும் 2 இலட்­சத்து 43 ஆயி­ரத்து 683 குடும்­பங்­களை சேர்ந்த எட்டு இலட்­சத்து 49 ஆயி­ரத்து 752 பேர் கடும் வரட்­சி­யினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­க­ளி லேயே அதி­க­ளவில் வரட்சி நில­வு­கின்­றது. குறித்த மாகா­ணங்­களில் மாத்­திரம் ஒரு இலட்­சத்து 86 ஆயி­ரத்து 180 குடும்­பங்­களை சேர்ந்த 6 இலட்­சத்து 53 ஆயி­ரத்து 358 பேர் கடு­மை­யான பாதிப்­புக்­க­ளுக்கு முகங்­கொ­டுத்­துள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தின் ஊடகப் பேச்­சாளர் பிரதீப் கொடிப்­பிலி தெரி­வித்தார்.நாட்டில் நிலவும் வரட்­சி­யினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளோர்­களின் தற்­போதைய நிலை குறித்து வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நாட­ளா­விய ரீதியில் வரு­டத்தின் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் பதி­னொரு மாவட்­டங்­களில் வாழும் 2 இலட்­சத்து 43 ஆயி­ரத்து 683 குடும்­பங்­களைச் சேர்ந்த எட்டு இலட்­சத்து 49 ஆயி­ரத்து 752 பேர் கடும் வரட்­சி­யினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

இவர்­களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களைச் சேர்ந்­த­வர்­களே அதி­க­ள­வி­லான பாதிப்­புக்­களை எதிர்­நோக்­கி­யி­ருக்­கின்­றனர். வட மாகா­ணத்தின் யாழ்ப்­பாண மாவட்­டத்தில் 34 ஆயி­ரத்து 49 குடும்­பங்­களை சேர்ந்த ஒரு இலட்­சத்து 23 ஆயி­ரத்து 433 பேரும், முல்­லைத்­தீவில் 35670 குடும்­பங்­களை சேர்ந்த ஒரு இலட்­சத்து 15 ஆயி­ரத்து 20 பேரும், கிளி­நொச்சி மாவட்­டத்தில் 23 ஆயி­ரத்து 206 குடும்­பங்­களில் வாழும் 80973 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

வவு­னியா மாவட்­டத்தில் 24507 குடும்­பங்­களை சேர்ந்த 85771 பேரும், மன்னார் மாவட்­டத்தில் 13499 குடும்­பங்­களில் வசிக் கும் 47710 பேரும் பாதிப்­புக்­க­ளுக்கு முகங்­கொ­டுத்­துள்­ளனர்.

இந்­நி­லையில் கிழக்கு மாகா­ணத்தின் திரு கோண­மலை மாவட்­டத்தில் 27646 குடும்­பங்­களை சேர்ந்த ஒரு இலட்­சத்து 5 ஆயி­ரத்து 847 பேரும், அம்­பா­றையில் 10310 குடும்­பங்­களை சேர்ந்த 36029, பேரும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 17293 குடும்­பங்­களில் வாழும் 58 ஆயி­ரத்தி 575 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.இதனை தவிர்ந்த ஏனைய மாவட்­டங்­க­ளான குரு­ணா­கலில் 29377 குடும்­பங்­களில் வசிக்கும் 97372 பேரும், புத்­தளம் மாவட்­டத்தில் 53159 குடும்­பங்­களில் வாழும் ஒரு இலட்­சத்தி 83 ஆயி­ரத்து 130 பேரும், அநு­ரா­த­புர மாவட்­டத்தில் 4344 குடும்­பங்­களில் 13264 பேரும் குறித்த வரட்­சி­யினால் இவ்­வ­ரு­டத்தின் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

வரட்சி கார­ண­மாக குறித்த மாவட்­டங்­களில் குடிநீர் தட்­டுப்­பாடு நில­வு­கின்­றது. இதனால் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்ள நான்கு இலட்­சத்­திற்கும் மேற்­பட்­டோ­ருக்கு பவு­ஸர்கள் மூலம் குடிநீர் விநி­யோக நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது.பாரிய அளவில் விவா­சாய நிலங்கள் அழி­வ­டைந்­துள்­ள­மை­யினால் பெரும்­பா­லான விவ­சா­யிகள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன், இலட்­சக்­க­ணக்கில் மீன்­களும் கடலில் இறந்து கரையொதுங்கியிருந்தன. இதனால் வட பகுதி மீனவர்களும் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியிருந்தனர்.

இந்நிலையில் வட பகுதியில் தற்போது தென் மேல் பருவப் பெயர்ச்சி மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறவுள்ளதால் தொடரும் வரட் சியான கால நிலை குறைவடையும் சாத்தி யம் உள்ளது என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -