வாகனம் செலுத்தும் போது மொபைல் போனை பாவிக்க வேண்டாம் என லண்டனில் பொலிசார் கடும் எச்சரிக்கைகளை விடுத்து வந்துள்ளார்கள். மேலும் சட்ட திட்டங்களையும் கடுமையாக்கியுள்ளார்கள். ஆனால் அதனை பலர் பின்பற்றுவதாக இல்லை. நேற்றைய தினம் (11) லண்டனில் மொகாரா எனும் 19 வயது உதவி ஆசிரியர் விபத்தில் பலியாகியுள்ளார்.
அவர் காரை ஓட்டிச் சென்றுகொண்டிருக்கும் வேளை, தனது மொபைல் போனை கையில் எடுக்க முற்பட்டுள்ளார். அது கீழே விழுந்துவிட அதனை எடுக்க குனிந்துள்ளார். ஆனால் எதிரே ஒரு பாரிய ரக் வண்டி வருவதை அவர் கவனிக்கவில்லை. இந் நிலையில் காரை எதிர் பக்கமாக ஓட்டிச் சென்று ரக் வண்டியோடு மோதியதிலேயே இவ் விபத்து நேர்ந்துள்ளது.
இதன் காரணமாக அவர் ஸ்தலத்திலேயே பலியானார் என பொலிசார் தெரிவித்துள்ளார்கள். எனவே வாகனத்தை செலுத்தும் போது மொபைல் போன் பாவிப்பதால் பல விபத்துகள் ஏற்படுகிறது. இதனை இனியாவது நாம் தடுப்போம்.
