நிர்வாண நிலையில் உடல்கள்: கதவை உடைத்து உள்ளே சென்றோருக்கு அதிர்ச்சி

மாலபே ரத்னாராம பிரதேசத்திலுள்ள வீடொன்னிறிலிருந்து ஆண் மற்றும் பெண்ணின் நிர்வாண உடல்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து இரு மனித உடல்கள் நிர்வாணமாக இருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலினடிப்படையிலேயே இரு உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.

தகவலினடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நீண்டநேரமாக வீட்டிலுள்ளவர்களை அழைத்தும் வீடு திறக்கப்படாத நிலையில், வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துள்ளனர். இதனடிப்படையில் உள்நுழைந்தபொலிஸார், அங்கு ஆண் மற்றும் பெண் ஆகியோரின் உடல்கள் நிர்வாண நிலையில் விழுந்து இருப்பதை அவதானித்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட பெண்ணின் உடலில் உயிர் இருப்பதை அறிந்த பொலிஸார் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு பெண்ணின் உடலை அனுப்பி வைத்ததையடுத்து பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கணவன், மனைவியே இவ்வாறு நிர்வாண நிலையில் மீட்கப்பட்டதாகவும் கணவன் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் எனவும் அவரது மனைவி ஒரு ஆசிரியையெனவும் பொலிஸாரின் முதல்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, இருவருக்கும் பிள்ளைகள் இல்லையெனவும் இருவரும் நீண்ட நாட்களாக தனியாக வசித்து வந்ததாகவும் குறித்த இருவரும் நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -