ஹஸ்பர் ஏ ஹலீம்-
மூதூர்- பெரியவெளி மல்லிகைத்தீவில் மூன்று பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டார்கள்.
இதனால் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது .
நேற்று (28)மாலை 4.00 மணிக்கு மாலைநேர (பிரத்தியேக) வகுப்புக்கு சென்ற மூன்று மாணவிகளே துஷ்பிரயயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்.
மல்லிகைத்தீவு பாடசாலை கட்டுமாணப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டவர்களுல் சிலரால் இம்மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர்கள் தலைமறைவாகியுள்ளதுடன் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய இருவரை அப்பிரதேச மக்கள் கட்டிவைத்தனர்.இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது ,இதனை கட்டுப்படுத்துவதற்கு வந்த பொலிஸாருக்கும் மக்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட பத்து பதின்மூன்று ஆகிய வயதுகளையுடைய மாணவிகள் மூவரும் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுடுள்ளனர்.
மேலதிக மேலதிக பரிாதனைக்காக இன்று காலை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதனை கண்டித்து இன்று 29 திருகோணமலை மட்டக்களப்பு பிதானவீதி சுமார் 5 மணித்தியாலயங்களக்கு மேல் எவ்வித போக்குவரத்தும் இடம் பெறாது மல்லிகைத்திவு சந்தியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவரும் இணைந்து கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்பகுியில் உள்ள 5 பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் இப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்க வருகை தந்த கிழக்கு மகாணசபை கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் பொது மக்களுடன் பேசி இப்பிரச்சினையை உரியவருக்கு தண்டனையும் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நீதியும் கிடைக்க வேண்டும் என்ற மக்களின் கேரிக்கையை இங்கு வருகை தந்த மாவட்ட பிரதி பொலிஸ் அத்தியட்டசகரும் கலந்துரையாடி பல நிபந்தனைக்கு மத்தியில் 3 நாளில் குறித்த குற்றவாளி கைது செய்யப்படுவார் என பொலிசாரால் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது கைதாகியுள்ள 04 சந்தேக நபரிடமும் தீவிர விசாரனை இடம் பெறுவதுடன் சம்மந்தப்பட்ட குற்றவாளியை கண்டு பிடித்து கைது செய்வதற்காக மாவட்ட பிரதி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
குற்றவாளியின் பெயரும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களால் தெரிவிக்கப்பட்டதால் அவர் தலைமறைவாகியுள்ளார் எனவே அவரை தேடும் நடவடிக்கை தற் போது பொலிசாரால் அதி தவிரமாக இடம் பெற்றுவருவதாக கூறினால் இதனடிப்படையில் குறித்த் போராட்டம் 2.00 மணியளவில் நிறைவடைந்தது 3 நாளில் குற்றவாளி கைதாகதாக நிலை ஏற்படுமானால் பாரிய போராட்டம் மன்னெடுக்கப்படும் என மக்கள் தெரிவித்தனர்.