முஸ்லிம்களுக்கு எதிராக சம்பிக்க

எம்.எச்.எம்.இப்றாஹிம், கல்முனை-

தான் எழுதிய அல்ஜிஹாத், அல் கைதா எனும் நூலை வெளிட்டு உரைநிகழ்த்துகையில் இலங்கை முஸ்லிம்கள் வந்தேறு குடிகள் என்றும், புலிப் போராட்டத்தில் நாம் பங்களிப்பு செய்யவில்லையென்றும் கூறியுள்ளார். 
போர்த்திக்கேயர் முஸ்லிம்களை விரட்டியடித்ததாகவும், சிங்கள மன்னர்கள்தான் முஸ்லிம்களை காப்பாற்றி சிங்கள பெண்களை திருமணம் செய்வித்து இங்கே பாதுகாத்து வைத்திருந்ததாகவும், அப்படிப்பட்ட முஸ்லிம்கள்தான் சிங்களவர்களின் காணிகளை அடாத்தாக பிடிப்பதாகவும், அவரது கற்பனை கதைகளை சிங்கள மக்கள் மத்தியில் பரப்ப துவங்கியுள்ளார். 
ஒலுவில் பிரகடணம் மூலம் முஸ்லிம்களும் தனிநாடு கேட்பதாகவும், தீகவாபிக்கு சொந்தமான காணிகளை முஸ்லிம்கள் பிடித்து வைத்துள்ளதாகவும் பொய்யான குற்றச்சாட்டுக்களை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்து வருகின்றார். 
அவருடைய இப்படியான நயவஞ்சக கூற்றுக்கு பதிலடி கொடுப்பதென்பதற்கு அப்பால், இவர் இதன் மூலம் என்ன விடயத்தை சாதிக்க முயல்கின்றார் என்பதை நாம் கவணிக்கவேண்டும்.இவருடைய கூற்றின் பிரகாரம் முஸ்லிம்கள் இந்த நாட்டில் வசிக்கக் கூடாது என்று சொல்லவருகின்றாரா? 
அல்லது இந்த நாட்டை விட்டு முஸ்லிம்கள் வெளியேர வேண்டும் என்று சொல்லுகின்றாரா.?அல்லது இந்த நாட்டில் முஸ்லிம்கள் சத்தம் போடாமல் அடிமைகளாக இருக்கவேண்டும் என்று சொல்லவருகின்றாரா? 
என்ற கேள்விகளுக்கு நாம் விடைதேட வேண்டியுள்ளது.
இவர் இந்த நல்லாட்சியின் முக்கிய உறுப்பினர் மட்டுமல்ல, முக்கிய அமைச்சுப்பதவியையும் வகிக்கின்ற ஒருவர், இவருடைய இனவாத கருத்துக்களுக்கு பதில் சொல்லக்கூடிய எமது அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் வாய்மூடி மௌனிகளாக இருப்பதன் நோக்கம் என்ன? 
நமது முஸ்லிம் உறுப்பினர்களுக்கு முஸ்லிம்களின் வரலாறுகள் தெறியாதா?சம்பிக்க ரணவக்கையின் பொய்க்கூற்றுக்களுக்கு நாம் பதிலளிக்க தேவையில்லை என்று நமது அரசியல் வாதிகள் நினைத்துக்கொண்டார்களா? 
சம்பிக்க ரணவக்க என்பவர் ஒரு சாதாரண மனிதரல்ல, அவர் இந்தாட்சியின் முக்கிய அமைச்சராவார், இவர் கூறும் நச்சுக் கருத்துக்கள் சிங்கள மக்களின் மத்தியில் இலேசாக சென்றடையும் என்பதில் எவ்வித சந்தேகமும் நாம் கொள்ளவேண்டியதில்லை. 
இப்படிப்பட்டவரின் கூற்றுக்களுக்கு பதில் கொடுக்கவோ அல்லது அவரது புத்தகத்துக்கு மறுப்பு தெறிவித்து மறு புத்தகம் வெளியிடுவதற்கோ மிகவும் பொறுத்தமானவர்கள் நமது அரசியல் வாதிகள்தான். ஆனால் நமது அரசியல் வாதிகள் இதனையெல்லாம் கண்டுகொள்ளாமல் தூங்கிக்கொண்டிருப்பார்களேயானால் அது நமது சமூகத்துக்குச் அவர்கள் செய்யும் பெரிய துரோகமாகும். 
அன்று சட்டசபையிலே இப்படியான கருத்துகள் வெளிவந்தபோது சுடச்சுட பதில் வழங்கி அந்த தப்பான கருத்துக்களுக்கு ஆப்பு வைத்த அரசியல்வாதிகளான அறிஞர் சித்திலெவ்வை, ரீ.பி.ஜாயா, சேர் ராசீக் பரீட் போன்ற தலைவர்கள் வாழ்ந்த பூமியில், இன்று பதிலளிக்க தகுதியான அரசியல் வாதிகள் இல்லாதிருப்பது என்பது நமது தற்போதை சமூகத்துக்கு கிடைத்த சாபமே என்பதுதான் உண்மையாகும். 
துருக்கி தொப்பி அணிவதற்கே போராடி வெற்றிபெற்ற அன்ற தலைவர்கள் எங்கே?ஒப்பிட்டு பார்க்கும் போது....இன்றய தலைவர்கள் எங்கே.? என்று கேட்கத் தூண்டுகிறது..! 
ஆகவே, இந்த நல்லாட்சியின் முக்கிய அமைச்சரான சம்பிக்க ரணவக்க என்பவர், முஸ்லிம்களின் எதிரி என்பதை மட்டும் நாம் அறிந்து கொண்டுள்ளோம், அதற்கேற்றாப்போல் நாமும் அவர்டைய நச்சுக்கருத்துக்களுக்கு நமது அரசியல்வாதிகளின் துணையுடன் கவணமாக காய் நகர்த்த வேண்டும் என்பதே எங்கள் அவாவாகும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -