மதுபான உற்பத்திசாலைக்கு எதிராக கல்குடா ஜம்மியத்துல் உலமா சபை வெற்றிகரமாக நடாத்தி முடித்த மக்கள் ஆர்ப்பாட்டம்



ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
ல்குடா கும்புறுமூலை பிரதேசத்தில் ஆரம்பிக்கப்படவுள்ல மதுபான உற்பத்திகு தேவையான மூலபொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையினை இடை நிறுத்துமாறு கல்குடா ஜம்மியத்துல் உலமா சபையினர் ஏற்பாடு செய்த மக்கள் அர்ப்பார்ட்டம் நேற்று(19.05.2017) வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின்னர் ஓட்டமாவடி பிரதான நாற்சந்திக்கு அருகாமையில் ஆரம்பிது வழைச்சேனை பொலீஸ் நிலையம் வரைக்கும் செறு வெற்றிகரமாக இடம் பெற்றது.

கல்குடா பிரதேசத்தில் உள்ள அனைத்து ஜும்மா பள்ளிவாயல்களிருந்தும் ஜும்மா தொழுகைக்கு பின்னர் ஒன்று சேர்ந்த மக்கள் வெள்ளத்தோடு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உருப்பினர்களான வியாழேந்திரன் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர்கள் கலந்து கொண்டதோடு கல்குடா ஜம்மியத்துல் உலமா சபையினை மதுமான தொழிற்சாலை உடனடியாக இடை நிறுத்துமாறு மக்கள் சார்பாக மகஜர்களை அமைச்சரிடமும், பாரளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள் ஆகியோர்களிடம் கையளித்தனர்.

அத்தோடு ஆர்ப்பாட்டம் நடந்த அதே வீதி வழியாக சிறீலங்க தெளஹீத் ஜமாத்தின் கல்குடா கிளையின் ஏற்பாட்டில் தனியான முறையிலு மதுபானசாலைக்கு எதிரான ஆர்ப்பாடம் இடம் பெற்றதனையும் அவதானிக்க குடியதாக இருந்தது. குறித்த இரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் இடம் நிகழ்வுகள் அடங்கிய எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -