ஏ.எம்.கீத் திருகோணமலை-
திருகோணமலையில் நேற்று தோப்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நீணாக்கோணி கிராமத்தில் சுமார் 55 வருடங்களா வாழ்ந்து விவசாயத்தில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் மக்களின் காணிகளுக்குள் அடாவடியாக புகுந்து காணிகளுக்கான வேலிகளை உடைந்தெரிந்து அம்மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் ஒரு பௌத்த மதகுருவும் அவருடன் வந்த பௌத்த இளைஞர் குழுவும்.
பதட்ட நிலை தொடரவே ஸ்தலத்திற்கு விரைந்த தோப்பூர் பொலிஸார் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இப்பிரச்சனைக்கான தீர்வினை நீதிமன்றத்தை நாடுவதன் முலம் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொண்டதை அடுத்து பதட்ட நிலை முடிவுக்க வந்தது.





