சலவைத்தொழில் செய்யும் தொழிலாளி ஒருவருக்கு உதவிய பொறியியலாளர் ஷிப்லி பாறுக்


எம்.ரீ. ஹைதர் அலி-

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து சலவைத்தொழில் செய்யும் தொழிலாளி ஒருவருக்கு அவரது சுய தொழிலினை மேம்படுத்தும் நோக்கில் மின் அழுத்தி (Iron Box) ஒன்று அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.

வறுமைக்கு மத்தியில் தன்னுடைய குடும்ப வாழ்வாதாரத்திற்காக இத்தொழிலில் ஈடுபட்டு வரும் குறித்த நபர் தன்னுடைய தொழிலிற்காக பயன்படுத்திவந்த மின் அழுத்தி (Iron Box) பழுதடைந்தமையினால் தொடர்ச்சியாக தன்னுடைய சுய தொழிலினை முன்னெடுப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்தார்.

அதனைத்தொடர்ந்து தனது சுய தொழிலினை மேம்படுத்தும் முகமாக மின் அழுத்தி (Iron Box) ஒன்றினை பெற்றுத்தருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளல் ஷிப்லி பாறுக்கிடம் குறித்த நபர் விடுத்த வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்திருந்தார்.

அதற்கமைவாக தனது 2016 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து மின் அழுத்தி (Iron Box) ஒன்றினை பெற்று குறித்த தொழிலாளியின் தொழில் நிலையத்திற்கு நேரடியாக சென்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கையளித்து வைத்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -