ஷீஆக்களுக்கு பகிரங்க விவாத அழைப்பு..!

எச்.எம்.எம்.பர்ஸான்-
டந்த சில தினங்களுக்கு முன்னர் "யார் இந்த ஷீஆக்கள் " ? எனும் வட்ஸ்அப் குழுமத்தில் நான் இணைக்கப்பட்டிருந்தேன். அக்குழுமத்திலே இணைக்கப்பட்டிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஷீஆக்களாகவும், நாங்கள் நடு நிலையாளர்கள் என்று சொல்லக்கூடிய ஷீஆ ஆதரவாளர்களாகவும் இருந்ததை என்னால் அவதானிக்க முடிந்தது. அவர்களில் சிலர் இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அவதானிக்கவும் இணைந்திருந்ததை என்னால் உணரக்கூடியதாக இருந்தது.

"யார் இந்த ஷீஆக்கள்"? எனும் கபடத்தனமான இக்குழுமத்திலே இணைக்கப்பட்டிருந்த ஷீஆக்களும், ஷீஆ ஆதரவாளர்களும் இலங்கை இந்தியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள். இஸ்லாத்துக்கு முரணான தமது வழிகெட்ட கருத்துக்களை அங்கே முன்வைத்து வந்த இவர்கள், என்னையும் சீண்டி அவர்கள் இடுகின்ற நச்சுக்கருத்துக்களுக்கு பதில்கள் கோரி வந்தார்கள்.

ஷீஆக்கள் தொடர்பில் அவர்கள் இடுகின்ற நச்சுக்கருத்துக்களுக்கு இவ்வாறான குழுமங்களில் பதிலளிப்பதனால் எதுவும் நடக்கப்போவதில்லை. அதே நேரம், அங்கே கருத்துக்களை இடுபவர்கள் பலர் நாகரிகமான வார்த்தைகளைப் பிரயோகிக்கின்றவர்களாகவோ இருக்கவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் தான் அவர்களுக்கான நேருக்ககு நேரான பகிரங்க விவாத அழைப்பொன்றை விடுத்து, " யார் இந்த ஷீஆக்கள்"? எனும் வழி கெட்ட குழுமத்திலிருந்து வெளியேறினேன்.

அங்கிருந்து நான் வெளியேறியதன் பின்னர் வஹ்ஹாபி பயந்து ஓடி விட்டான். கோழை, பேடி, பொய்யன், சவூதியின் கைக்கூலி என்றெல்லாம் பலவாறான கருத்துக்களையும் விமர்சனங்களையும் தனிப்பட்ட அச்சுறுத்தல்களையும் அவர்கள் விடுத்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் நான் ஒரு உண்மையை தெளிவுபடுத்த வேண்டிய நிலையிலுள்ளேன். அதாவது நாம் ஒரு சில நிமிடங்கள் வட்ஸ்அப் குழுமங்களில் பேசுவதனால் எதுவும் ஆகப்போவதில்லை என்று கருதியும், எமது பொன்னான நேர காலங்களை வீணடிக்க விரும்பாததன் காரணத்தினாலுமே வெளியேறினேனே தவிர, ஷீஆக்களுக்கெதிரான பகிரங்க விவாத அழைப்பிலிருந்தோ அவர்கள் வழி கேடர்கள், காபிர்கள் என்ற என்ற ஆணித்தரமான கொள்கையிலிருந்தோ வெளியேறி விட்டதாக ஷீஆக்களோ ஷீஆக்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட நடுநிலையாளர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வோரோ எண்ணி விடக்கூடாது.

தகிய்யா எனும் பச்சோந்தி தனமான கொள்கைக்குள் மறைந்து கொண்டு நரித்தனமான செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஷீஆக்களுக்கெதிரான பிரச்சாரமென்பது நேற்றோ, இன்றோ தோற்றம் பெற்றதல்ல. அது உருவாகிய காலப்பகுதியிலிருந்து சுமார் 1400 வருடங்களைத் தாண்டிய பிரச்சாரமாகும். என்றைக்கு அது உருவானதோ அன்றிலிருந்து குர்ஆன், சுன்னாவுடைய நிழலில் ஷீஆ என்பது வழிகேடு என்பதனை நிரூபிப்பதற்கான முயற்சிகள் இஸ்லாமிய உம்மத்திலிருக்கின்ற அறிஞர்களால் தொன்று தொட்டு இன்று வரைக்கும் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது.

ஷீஆக்கள் என்போர் வழிகேடர்கள் என்பதிலும், பல கொள்கை விடயத்தில் குப்ரியத்திலிருக்கிறார்கள் என்கின்ற விடயத்திலும் எமக்கு எள் முனையளவும் எந்த சந்தேகமுமில்லை. அந்த விடயத்தில் மிகத்தெளிவாகவும், உறுதியாவும் நாமிருக்கின்றோம்.

இலங்கைத் திருநாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடாத்தொகுதியில் ஷீஆப்பிரசாரம் ஊடுருவிய காலந்தொட்டு அதற்கெதிரான பிரசார முயற்சியிலே நாம் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக. ஈடுபட்டு வருகின்றோம். இந்த வழிகேட்டுக் கொள்கையைப் பின்பற்றுகின்றவர்களையும், அவர்களுடைய அமைப்புகளையும் எங்களுக்குத் தெளிவாகத் தெரியும். அவர்களுடன் இந்தக் கொள்கை வழிகேடு என்று பேசுவதற்கு எங்களுக்கு எவ்விதமான ஆட்சேபனையோ அச்சமோ கிடையாது.

ஷீஆக்களின் வழிகேட்டுக் கொள்கையை இந்தப்பிரதேசத்தில் சொல்வதில் ஏனைய அமைப்புகளை விட நாங்கள் முன்னணியில் இருக்கின்றோம் என்பதை சகலரும் அறிவர். இதுவரைக்கும் பகிரங்கக்கூட்டங்கள், மாநாடுகள், மிம்பர் மேடைகள், கருத்தரங்குகள் என்று ஒழித்து நின்று சொல்லாமல் ஒளிவு மறைவின்றி மிகத்தெளிவாக தைரியத்தோடு ஷீஆக்களுக்கெதிரான பிரசாரத்தினை நாங்கள் செய்து கொண்டிருகிறோம்.

ஷீஆக்கொள்கை வழிகேடு என்பதை நிரூபிக்க அவர்களுக்கு பலமுறை கடந்த காலங்களில் பகிரங்கமாக பல அழைப்புக்கள் விடுக்கப்பட்டிருக்கின்றது. இப்போதும் அவர்களை அழைக்கின்றோம். ஷீஆக்கள் கடந்த காலத்தில் அவர்களுடைய தகிய்யா கொள்கைக்குள் மறைத்து பச்சோந்தித்தனமாக செயற்பட்டு வந்தவர்கள். தாங்கள் ஷீஆக்கள் இல்லையென்று பல இடங்களில் பகிரங்கமாகச் சொன்னவர்கள் இன்று ஊடகங்களில் சமூக வலைத்தளங்களில் அந்தக் கொள்கைகளை பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இன்னுமின்னும் நீங்கள் முகம் காட்டாமல் ஒழிந்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. இன்று இந்த சமூகம் ஷீஆக்கள் என்றால் யார்? அவர்களின் கொள்கைகள் என்ன? என்பதைத் தெளிவாக அறிந்து வைத்துள்ளார்கள். அதே நேரம் நீங்கள் ஒழிந்து கொண்டு கருத்துச் சொல்வதால் உங்களை யாரும் நம்பப்போவதுமில்லை. எனவே தகிய்யா வேசம் களைந்து முகம் காட்டி வெளியே வாருங்கள்.

முகம், முகவரி தெரியாமல் ஒழிந்து கொண்டு வட்ஸ்அப் பேஸ்புக் யுத்தம் செய்வதை கை விட்டு, தாங்கள் சொல்வது உண்மை, சத்தியம் என்று நினைத்தால் சமூக தளத்திற்கு வாருங்கள். பகிரங்கமாக விவாதிப்போம். மக்கள் மன்றில் நேருக்கு நேர் பேச, எந்த இடத்திலும், எப்போதும் நாங்கள் தயாராகவே இருக்கின்றோம் என்பதை மிக உறுதியாக தெரிவித்து அழைப்பு விடுக்கின்றோம்.
அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மத் (காஸிமி) MA
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -