முதலில் பேய்... அடுத்து தேனீக்கள்; பதறியோடினர் எம்பிக்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வு விடுதி ஒன்று நுவரெலியாவில் உள்ளது. பிரித்தானிய ஆட்சியாளர்களால் ஓய்வு விடுதியாகப் பயன்படுத்தப்பட்ட இல்லம்தான் இலங்கை எம்பிக்கள் ஓய்வு விடுதியாக மாறியுள்ளது. இந்த விடுதி அவ்வப்போது சர்ச்சைக்குள் சிக்குவதுண்டு. ஓரிரு மாதங்களுக்கு முன் ஐக்கிய தேசிய கட்சியின் எம்பியான நலின் பண்டார அந்த விடுதியில் தங்கி இருந்தபோது பேய்த் தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறி இருந்தார். இதனைத்தொடர்ந்து தேனீக்களும் அங்கு செல்லும் எம்பிக்களைத் தாக்கத் தொடங்கின.

அந்த விடுதியைச் சுற்றி யன்னல் கதவுகளில் பத்து, பதினைந்து தேன் கூடுகள் திடீரெனத் தோன்றின. இதனால் அங்கு செல்லும் எம்பிக்கள் கடும் அசௌகரியத்தை எதிர்கொள்ளத் தொடங்கினர். ஒவ்வொரு எம்பிக்களையும் அந்தத் தேனீக்கள் பதம்பார்க்கத் தொடங்கின. அந்தத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத எம்பிக்கள் உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்ய
அந்த அதிகாரிகளின் ஏற்பாட்டால் அண்மையில் அந்தத் தேன் கூடுகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன. இப்போது எம்பிக்கள் நிம்மதியாக அங்கு ஓய்வு எடுக்கிறார்களாம்.
எம்.ஐ.முபாறக்- சிரேஷ்ட ஊடகவியலாளர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -