சுமார் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே, கொழும்பு துறைமுகத்தில் தமது நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று தரித்து நிற்க்க சீனா இலங்கையிடம் அனுமதி கோரியுள்ளது. இதனை முதலில் இலங்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது உண்மைதான். ஆனால் பின்னர்தான் இந்திய பிரதமர் கொழும்பு வருவது தொடர்பான விடையத்தையும் இதனையும் அவர்கள் ஒப்பிட்டு பார்த்து உடனே அனுமதி தர மறுத்துவிட்டார்கள்.
ஆனால் இதனை இந்தியா போன்ற நாடுகள் மிகவும் உண்ணிப்பாக அவதானித்துள்ளது. மோடி கொழும்பிற்கு வர முன்னரே தனது நீர் மூழ்கிக்கப்பலை கொழும்பில் நிறுத்தி ஓசைபடாமல் வேவுபார்க்க , சீனா தயாராக இருந்துள்ளது. அதுபோக இந்திய பிரதமருக்கு வழங்கப்படும் 3 அடுக்கு பாதுகாப்பு. அதன் வியூகம். அவர்கள் பாவிக்கும் தொலைதூரக் கருவிகள். ஸ்கேனர்கள் என்ன என்று பல விடையங்களை அருகில் இருந்தபடியே சீனா அறிய முயற்ச்சி ஒன்றை மேற்கொண்டு உள்ளது.
ஆனால் அது பலனளிக்காமல் போய்விட்டது என்கிறார்கள். சீனா தனது கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்துவது தொடர்பாக இலங்கையிடம் கேட்ட விடையத்தை இலங்கை அரசு மறைக்க முடியாமல் நேற்றைய தினம் அதனை வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
