திருகோணமலை: நண்பர்களுடன் கடலில் குளிக்கச்சென்றவர் மரணம்

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை நகர சபைக்கருகிலுள்ள கடற்கரையில் நீராடச்சென்று நீரில் மூழ்கி பொலிஸ் உயிர் காப்பு பிரிவினரால் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது இன்று (12) மாலை 6.00மணிளளவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் நான்கு பிள்ளைகளின் தந்தையான திருகோணமலை. மின்சார நிலைய வீதியைச்சேர்ந்த டி.சிறி ராஷா (52வயது) எனவும் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது- 

மட்டக்களப்பிலிருந்து வருகை தந்திருந்த நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது. உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மரணம் தொடர்பில் துறைமுக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -