அப்துல்சலாம் யாசீம்-
அனுமதிப்பத்திரமில்லாமல் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் நடாத்தியமைக்காக ஒரு இலட்சம் ரூபாய் தண்டம் செலுத்துமாறு இன்று (09) திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.
இவ்வாறு தண்டம் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர் கிண்ணியா.மாஞ்சோலைச்சேனையைச்சேர்ந்த எஸ்.சனீஸ்பர் பாரூக் (38வயது) எனவும் தெரியவருகின்றது.
குறித்த நபருக்கெதிராக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் வெளிநாட்டில் வேலை வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக கடந்த 2012-10-18ம் திகதி திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அவ்வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றத்தை ஒப்புக்கொண்ட போதே இவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் தண்டம் செலுத்துமாறும் அப்பணத்தை செலுத்த தவறும் பட்ஷத்தில் 06மாத கால கடூழிய சிறை தண்டனையும் வழங்குமாறு உத்தரவிட்டார்.
