வில்பத்துவில் உண்மையை உணர்ந்த அமைச்சர் ரிசாட்



வில்பத்துவில் ஆரம்பிக்கப்பட்ட நில அபகரிப்புக்கெதிரான போராட்டம் இடை நடுவில் கைவிடப்பட்டது. கோப்பிலாறு மக்களின் போராட்டம் அவர்களின் நிலங்களை மீட்ட உடன் நிறைவடைந்தது.அதை நிறுத்த சொல்ல வேண்டிய தேவை யாருக்கும் எழவில்லை.

இந்தப் போராட்ட வடிவங்களை அரசியல் தலைவர்கள் அரசுக்கு சாமரம் வீசவும் அவர்களின் தேவைகளை அடைந்து கொள்ளவும் மாத்திரம் பயன்படுத்தி தமது தேவைகளை நிறைவேற்றுகின்றனர்.

இந்திய பிரதமர் இஸ்லாத்தின் எதிரியின் வருகைகாக முஸ்லீம்களால் உருவான ஆட்சி முஸ்லீம் மக்களின் போராட்டத்தை கைவிடச்சொல்வதும் அதை தரகு வேலை செய்யும் முஸ்லீம் தலைவர்கள் நடைமுறைப்படுத்து வதும் மிகுந்த துயரம்.

அரசின் பொம்மைகளாக வடக்கு கிழக்கு மக்களின்அரசியல் அபிலாசைகள் தொடர்பில் எந்தவொரு விடயத்தினையும் அறிந்து கொள்ள முடியாத பக்குவமின்றி வாய் பேச்சு வீரர்களாக வலம் வரும் ஆசாத் சாலி பைசர் முஸ்தபா போன்றோர் இவ்வாறான விடயங்களில் மூக்கை நுழைப்பது அரசுக்கு தங்களின் விசுவாசத்தை வழங்கவும் தேவையேற்படும் போது ரிசாட்டை காப்பதற்குமாகும். இந்த சமுகத்தின் அதிக வாக்குகளை பெற்றேன் என கூறும் ஹக்கீம் உள்ளிட்டோர்மெளனம் காப்பதும் தரப்பட்ட கட்டளைகளின் பிரகாரமே.

ரிசாட் கடந்த இரண்டு வருடங்களின் முன் ஆற்றிய உரை ஒன்றை உங்களுக்காக தருகிறேன்அவர் புரிந்து கொண்ட விடயங்களை சமுகத்திற்க்கு எத்தி வைக்க முன் வர வேண்டு்ம்.

ஆசாத் சாலி பைசர் முஸ்தபா இதர வியாபார கூட்டுகளை புறந்தள்ளி தன்னை நம்பி வட புல மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண முன் வர வேண்டுவே ஒழிய இவர்களுடன் இணைந்த நாடக அரசியலை முஸ்லீம் சமுகத்தை வைத்து முன்னெடுப்பாரானால் அல்லாஹ் விடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

அஸ்மி ஏ கபூர்
முன்னாள் மாநகர சபை உறுப்பினர் 
அக்கரைப்பற்று 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -