25ம் திகதி வியாழக்கிழமையே ஹர்த்தால்!

மது முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் (MRO) பெயரை பயன்படுத்தி ஒரு சில சக்திகள் நாளை புதன்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதாக முகவரியோ தொலைபேசி தொடர்பு இலக்கங்களோ இன்றி பரப்பி வருகின்றனர். 

முக்கியமாக சில மஹிந்த தரப்பு ஆதரவாளர்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக எமக்கு அறிய வருகிறது. முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு கொழும்பை மையமாக வைத்து நாடுபூராகவும் செயற்படும் ஓர் அமைப்பாகும். கடந்த ஒரு தசாப்த காலமாக எமது அமைப்பு பல போராட்டங்களை நடாத்தியுள்ளது.

MRO அமைப்பு மஹிந்த ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்களின் உரிமை தொடர்பாக களத்தில் இருந்து செயலாற்றி வந்த அமைப்பாகும். அதுமட்டுமல்லாமல் எந்த அச்சுறுத்தல்களுக்கும் முகம் கொடுக்கும் நிலையில் செயலாற்றும் அமைப்பாகும். எமது MRO அமைப்பை சீர் குலைக்கும் நோக்கத்துடனே சிலர் ஹர்த்தால் தொடர்பான கதையாடல்களை ஆரம்பித்திருப்பதாகவும் எமக்கு அறியக் கிடைத்திருக்கிறது. 

எனவே ஜனநாயக ரீதியில் எமக்குள்ள உரிமையை பயன்படுத்தி இந்த ஹர்த்தாலை வெற்றிகரமாக நடாத்துவதற்கு உதவுமாறு சகல தரப்பினரிடமும் வினயமாக வேண்டிக்கொள்கிறோம்.
MRO - contact : 0703880577
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -