20ஆம் திகதி சம்பூருக்கு விரைகிறார் ஜனாதிபதி - வைத்தியசாலை திறந்து வைப்பு

சப்னி அஹமட்- 
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் 40மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்டதிருகோணமலை சம்பூர் வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாகதரமுயர்த்தப்பட்டு இம்மாதம் 20ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால ஶ்ரீசேனவினால்திறந்து வைக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

குறித்த வைத்தியசாலையையும், ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ள சம்பூர்கலாச்சார மண்டபம், கடற்கரை பூங்கா போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும்வேலைட்டங்களை பார்வையிட்ட பின்னர் இன்று(12) நடைபெற்றகலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

23 ஆளனியுடன் உள்ள இவ்வைத்தியசாலையில் தாதியர் விடுதி, வைத்தியர் விடுதி,நோயாளர் விடுதி , வெளிநோயாளர்ப்பிரிவு கொண்ட முக்கிய பிரிவுகள்இவ்வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதுடன். அதற்கான அனைத்துவிதமான வைத்திய வளங்களும் வழங்கப்பட்டு சீர் செய்யப்பட்டுள்ளது. எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், சம்பூர் பிரதேச மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்த கடற்கரை பூங்காமற்றும் கலாச்சார மண்டப வேலைத்திட்டங்களையும், வைத்தியசாலைக் கட்டிடவேலைத்திட்டங்களையும் உரிய அதிகாரிகளுடன் விரைந்து பார்வையிட்டுமேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களின் முன்னெடுப்புக்கள் தொடர்பாகஆராய்ந்து அங்குள்ள பிரச்சினைகளை கேட்டறிந்து அது தொடர்பாகஉரியவர்களிடமும் தொடர்புகொண்டதுடன் இவ்வேலைத்திட்டங்களை மிகஅவசரமாக முன்னெடுப்பது தொடர்பாகவும் அங்கு உரியவர்களிடம்கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலின் போது, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நடரஜான், கிழக்குமாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர் உசைனுடீன், மாகாணப்பணிப்பாளர் முருகானந்தன், பிராந்திய சுகாதார பணிப்பாளர் கயல்வெலி, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பிரத்தியேக செயலாளர் யூ.எல் வாஹிட், கிழக்கு மாகாண சுகாதர அமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி நயீம், பொலிஸ் அத்தியட்சகர், வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -