தாய் வெளிநாட்டில், தந்தை குடியில்,சகோதரர்கள் குடுவில்,அந்த 16 வயதுச் சிறுமியோ..?

ளுத்துறைப் பிரதேசத்தில் ஒரே வீட்டில் நான்கு பேருடன் இருந்த சிறுமி ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறுமிக்கு 16 வயது. இவருடன் இருந்த ஏனைய நால்வரும் இளைஞர்கள். இந்த ஐவரும் தற்போது பொலிஸ் காவலில் இருப்பதாகத் தெரிகிறது.

பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வந்த இரகசிய தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியின் தாய் தொழிலுக்காக வெளிநாடு சென்றுவிட்டார். தந்தை குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். இரண்டு சகோதரர்களும் போதை வஸ்துக்கு அடிமையானவர்கள் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த சிறுமி பணம் சம்பாதிக்கும் நோக்கிலேயே இவ்வாறு பல இளைஞர்களுடன் இருந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. மேலும், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -