றியாத் ஏ. மஜீத்-
இறக்காமம் மக்களுக்காக சமூக வாஞ்சையுடன் ஒன்றிணைந்து மக்கள் எதிர்ப்பு பேரணியில்கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட அனைத்து ஊர் மக்களுக்கும் இறக்காமம் மக்கள் சார்பாகஉளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் என இறக்காமம் பிரதேச சபையின்முன்னாள் தவிசாளர் மௌலவி எம்.ஜபீர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையைஅகற்றக்கோரியும் அங்கு நிறுவப்படவுள்ள பௌத்த மடத்திற்கு தனியார் காணியைசுவீகரிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சியினை கண்டித்தும் இன்று (28) வெள்ளிக்கிழமைஜூம்ஆத் தொழுகையை தொடர்ந்து அம்பாறை மாவட்ட முஸ்லிம் ஊர்களில் மக்கள் எதிர்ப்புபேரணி பெருந்திரளான மக்கள் பங்குபற்றலுடன் வெற்றிகரமான இடம்பெற்றமைஇனவாதிகளுக்கு கொடுத்த பலத்த அடியாகும்.
இந்த மக்கள் எதிர்ப்பு பேரணி மூலம் அம்பாறை மாவட்ட மக்களின் ஒற்றுமையையும் பலத்தைஅரசுக்கு காட்டியுள்ளதோடு சிலை வைப்புக்கான பலத்த எதிர்ப்பினை ஜனாதிபதி, பிரதமர்உள்ளிட்ட அரசாங்கத்திற்கு தெளிவாக சொல்லியுள்ளோம்.இறக்காமம் புத்தர் சிலை விவகாரம் சம்பந்தமாக அரசியல் தலைமைகள் தங்களதுநடவடிக்கையினை மேற்கொள்ளும் அதே சமயத்தில் இவ்வாறான மக்கள் எதிர்ப்பு பேரணிநாட்டின் அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுத்துள்ளதுடன் சர்வதேசத்திற்கு இப்பிரச்சினைகொண்டு செல்லப்பட்டுள்ளது.
இப்பேரணியினை ஒவ்வொரு ஊர்களிலும் நடாத்துவதற்கு ஒழுங்குகளை மேற்கொண்டகட்;சியின் முக்கியஸ்தர்கள், இளைஞர்கள், கட்சியின் போராளிகள் பொதுமக்கள்அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்அவர்களினால் இறக்காமம் விவகாரத்தினை பிரதி அமைச்சர் ஹரீஸிடம்பொறுப்பளித்திருந்தார். இதனை அடுத்து இம்மக்கள் எதிர்ப்பு பேரணியை சிறப்பாக மாவட்டம்முழுவதும் ஒவ்வொரு ஊர்களிலும் ஒழுங்குபடுத்தி வெற்றிகரமாக நடைபெறுவதற்குஏற்பாடுகளை செய்த கட்சியின் பிரதித் தலைவரும், பிரதி அமைச்சருமான ஹரீஸ்அவர்களுக்கு விசேடமாக இறக்காமம் மக்கள் சார்பாக நன்றிகளைதெரிவித்துக்கொள்கின்றோம் எனவும் தெரிவித்தார்.