இறக்காமம் மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்;ள புத்தர் சிலையை அகற்றக்கோரியும்அங்குள்ள சிறுபான்மை இன தமிழ், முஸ்லிம்களின் காணிகளை பாதுகாப்பதற்குமான மக்கள்எதிர்ப்பு பேரணியும் அமைதி ஊர்வலமும் இன்று (28) வெள்ளிக்கிழமை ஜூம்ஆத்தொழுகையை தொடர்ந்து சாய்ந்தமருது, கல்முனை பிரதேசங்களில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது, கல்முனை பிரதேச சிவில் அமைப்புக்கள், பொதுமக்கள், இளைஞர்களின்ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டததில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டவர்கள் நிறுத்து! நிறுத்து! காவிப்பயங்கரவாதத்தை நிறுத்து...!, பௌத்தர்கள் வாழாத சிறுபான்மை இன பிரதேசங்களில் புத்தர்சிலை வைக்காதே! வைக்காதே!, மாயக்கல் மலையில் வைத்த சிலையை அரசே அகற்று,சமயத்தின் போர்வையில் அராஜகம் செய்யாதே!, நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றாதே!,முஸ்லிம்களின் காணிகளை அபகரிக்க நினைக்காதே!, புத்தர் சிலையை நீக்கி நல்லாட்சிஅரசை உறுதி செய்! போன்ற எதிர்ப்பு சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஜூம்ஆப்பள்ளியிலிருந்து பிரதேச செயலகம் வரை பேரணியாகச் சென்று கல்முனை பிரதேசசெயலாளர் எம்.எச்.கனி, சாய்ந்தமருது உதவிப் பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ்ஆகியோரிடம் ஜனாதிபதி, பிரதமருக்கான மகஜரினை கையளித்து வைத்தனர்.