தலவாக்கலை தோட்ட பகுதி ஆலயம் உடைத்து திருட்டு...!

க.கிஷாந்தன்-
லவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை சென்.கிளயார் தோட்ட கிளனமேரா பிரிவின் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பிரதான நுழைவாயில் உடைக்கப்பட்டு உள்ளே நுழைந்த இனந்தெரியாதவர்கள் இவ்வாலயத்தின் 30,000 ரூபா பெறுமதியான அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தாலியை களவாடிச் சென்றுள்ளனர்.

01.03.2017 அன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என விசாரணைகளை மேற்கொள்ளும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

2016.01.22 அன்று இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதன்போது அம்மனுக்கு தங்க தாலி அணிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 01.03.2017 அன்று அதிகாலை இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அத்தோடு தலவாக்கலை பொலிஸாருக்கு புகார் செய்யப்பட்டதையடுத்து 01.03.2017 அன்று புதன்க்கிழமை தலவாக்கலை பொலிஸாரும், நுவரெலியா பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினரும், கைரேகை பிரிவினரும்ஆலய கட்டிடத்திற்கு சென்று சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். அத்தோடு சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும், பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணகைளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -