க.கிஷாந்தன்-
மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திற்கு நீர்வழங்கும் மஸ்கெலியா சாமிமலை பெயார்லோன் ஆற்றில் 28.02.2017 அன்று மாலை குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படும் ஆணின் சடலமொன்றை 01.03.2017 அன்று மதியம் 12 மணியளவில் மஸ்கெலியா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
குடும்ப தகராறு காரணமாக ஆற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்ட மேற்படி நபர் சாமிமலை பெயார்லோன் தோட்டம் சின்ன சூரியகந்தை பிரிவைச் சேர்ந்த கந்தையா கார்த்திக் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவரின் சடலத்தை ஆற்றிலிருந்து மீட்டெடுப்பதற்கு பிரதேச மக்கள் 01.03.2017 அன்று காலை முதல் அரும்பாடுபட்டதுடன் மஸ்கெலியா பொலிஸாருடன் நல்லதண்ணி பிரதேச கடற்படையினரும் ஈடுப்பட்டமை குறிப்பிடதக்கது.
இருந்தும் 12 மணியளவில் இந்த சடலம் மீட்கப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் தொடர்பான மரண விசாரணைகளை மேற்கொண்ட பின் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை நாவலப்பிட்டி சட்ட மருத்துவ அதிகாரிக்கு அனுப்பப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

