அம்பாரை மாவட்ட பட்டதாரிகளின் வேலையின்மை பிரச்சினை தொடர்பான சத்தியகிரக போராட்டம் கடும்மழைக்கு மத்தியில் நான்காவது நாளாக நடைபெற்று வருகின்றது. இப்போராட்டம் கடந்த 27ம் திகதி ஆரம்பமானதுடன் சுமார் 1000க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன் மாவட்டத்தில் தற்போது வேலையில்லாத அனைத்துப்பட்டதாரிகளுக்கும் வேலை வாய்ப்பினை வழங்குமாறும் வேலைவாய்ப்பு வழங்கும் வயதை 45ஆக அதிகரிக்குமாறும் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதில் வேலைவாய்ப்பு வழங்கும் வயதை 45ஆக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் நிறைவேறிய நிலையில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு நியமனங்கள் தொடர்பாக எந்த வித வாக்குறுதிகளோ நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக போராட்டம் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இந்த சத்திய கிரக போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள பட்டதாரிகளை பல்தரப்பட்ட அரசியல் கட்சிகள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர்.









