கல்வி ஒன்றே தமிழர்களின் கேடயம் - ஜெனாத்தனன்

ஹஸ்பர் ஏ ஹலீம்-
ல்வேறு விடயங்களில் எமது பிரதேசத்தை நாமே ஆண்ட பரம்பரையில் வந்த நாம் தற்போது சில விடயங்களில் பின்நோக்கி செல்கிறோம் அவற்றை எல்லாம் எதிர் காலத்தில் நாம் மீட்டெடுப்பதற்கு கேடயமாக நம்மிடம் இருப்பது கல்வி ஒன்றே என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனாத்தனன் தெரிவித்தார்.

நேற்று 28.02.2017 ஈச்சிலம்பற்று வாழைத்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் இடம் பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் முதன்மை அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றும் போது எமது வளங்களை அக்கிரமிப்பு செய்வதற்கு அரசாங்கமும் ஏனைய இன சமூகமும் கங்கனம் கட்டிக் கொண்டு வலம் வருகின்ற இன்றைய சூழலில் அவற்றை நாம் பாதுகாக்க விழிப்புடன் செயற்பட வேண்டியுள்ளது.

அதனை விட பல்வேறு காரணிகளால் பாதிக்கப்பட்ட ஈச்சிலம்பற்று பிரதேசத்திற்கும் பல வளப்பற்றாக்குறைகள் காணப்படுகிறது அவை தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களிடம் தொடர்ந்து நாம் அழுத்தம் கொடுத்து வருகின்றோம்.

குறிப்பாக ஆசிரியர் பற்றாக்குறை இப்பகுதியில் அதிகமான உள்ளது. எனவே எமது மாணவர்களின் அடைவு மட்டம் நகரத்தில் திருப்தியாக இருந்தால் அது எமது வெற்றியாக கொள்ள முடியாது அது கிராமங்களிலும் அதிகரிக்க வேண்டும் அப்போது தான் அது உண்மையான கல்வி வளர்சியாகும் என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -