சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து நான் வெளியேற்றப்படதாகவோ அல்லது வெளியேறியதாக கூறப்படுகின்ற செய்திகளில் எந்தவித உண்மையும் கிடையாது. இது போன்ற பல பொய்யான வதந்திகளை ஒரு சிலரால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதினால் மக்கள் மத்தியில் குறித்த வதந்திகள் தீவிரமாக பரவிவருகின்றது.
எனவே என்னுடைய நிலைப்பாட்டினையும், முஸ்லிம் காங்கிரசின் தலைமையானது தனக்கு செய்துள்ள துரோகத்தினையும், இரண்டு வருடகாலமாக கட்சியின் தலைமைக்கும் தனக்கும் இடையில் இடம் பெற்ற பிரச்சனைகள் சம்பந்தமாக தெளிவினை மக்கள் முன் வெளிப்படுத்துவதற்காக நாளை வெள்ளிக்கிழமை 03.03.2017 மாலை நிந்தவூரில் பொதுக்கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கின்றார் முன்னாள் முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் ஹசன் அலி.
மேலும்..இவ்வாறான சூழ் நிலையில் குறித்த பொதுக்கூட்டத்திற்கு ஏற்கனவே முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலுள்ள உயர் மட்ட உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதோடு, தேசிய ரீதியில் பல பிரதேசங்களில் 1987ம் ஆண்டு தொடக்கம் வாழ்ந்து வரும் கட்சியின் உண்மையான போராளிகள் அனைவரும் அக்காலகட்டத்தில் எந்த உணர்வோடு முஸ்லிம் காங்கிரசிற்காக அணி திரண்டு ஒருமித்த குரலில் செயற்பட்டார்களோ அவ்வாறே நாளை இடம் பெறுகின்ற கூட்டத்திலும் கலந்து கொள்ளுமாறு பகிரங்க அழைப்பு விடுப்பதாக முன்னாள் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவிக்கின்றார்.
