இது தொடர்பில் பிரதேச உதவிச்செயலாளர் அதிசயராஜ் அவர்களை இம்போட்மிரர் தொலைபேசியில் அதிகாலை 12.50 க்கு தொடர்பு கொண்டு கேட்டபோது இவ்வாறு தெரிவித்தார்:
நாங்கள் நிருவாகத்தினர் இங்கு அரசியல் அதிகாரம் கொண்டவர்கள் சம்மந்தப்பட்ட அமைச்சுக்களின் அஜந்தாக்கள் அவர்கள் செய்து தருவதைத்தான் நாங்கள் செயற்படுத்தலாம். ஆனால் கிழக்கு மாகாண அமைச்சர் அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர் என்னும் போது அவரின் ஆதரவாளர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று எனக்கும் பிரதேச செயலாளருக்கும் தெரியும். நாங்கள் இதில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்த உதவிச்செயலாளர் நானும் பிரதேச செயலாளரும் வீட்டில் இருக்கிறோம் அப்படி எந்த கடத்தலும் நடக்கவில்லை இது வீணான வதந்தி என்று இம்போட்மிரருக்குத் தெரிவித்தார்.
குறித்த நடவடிக்கை தொடர்பில் மாகாண அமைச்சரின் பிரிவினர் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்: அட்டாளைச்சேனை பிரதேச செயலக நிகழ்வில் அட்டாளைச்சேனையில் இருக்கும் ஒரே ஒரு கிழக்கு மாகாண அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் அதிலும் அம்பாரைக்கே ஒருவராக இருக்கும் அமைச்சரை இந்த நிகழ்வில் உள்வாங்காமல் அம்பாரையில் இருக்கும் அமைச்சர் தயாகமகேயை கல்வெட்டிலும், அழைப்பிதழிலும் போட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதுமாத்திரமல்லாமல் அம்பாரை மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவராக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.மன்சூரை உள்வாங்கியிருக்க வேண்டும் ஆனால் அவரை உள்வாங்க வில்லை. சொந்த ஊரில் நடக்கும் நிகழ்வில் மாகாணத்தின் அமைச்சரைப் புறக்கணித்தது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சரின் பக்கம் இருந்து கருத்துக்கள் வந்தன.
இது தொடர்பில் ஊர் பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கும்போது கிழக்கு மாகாண அமைச்சரை புறக்கணித்து விட்டு அவரது ஊரில் ஒரு நிகழ்வு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியான நிகழ்வுகள் நடந்தால் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று காட்டமான கருத்துக்களை முன்வைத்தனர்.
ஆனால் எது எவ்வாறாயினும் ஊரில் இருக்கும் இரண்டு அரசியல்வாதிகளான முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை இன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் ஆகியோர் இருவரையும் உள்வாங்கியிருக்க வேண்டும். ஆனால் இதில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையை உள்வாங்கி இன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.நசீரைப் புறக்கணித்துள்ளமை இந்த நல்லாட்சியில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே கருத்தப்படுகிறது. இப்படியான தவறுகள் இனிமேலும் நடக்காதிருத்தல் நன்று.
