மருதமுனை கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையத்தின் உறுப்பினர்களுக்கும்,கிழக்குமாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.றஸாக்கிற்கும் இடையிலான சந்திப்பும்,கலந்துரையாடலும்,நிதி கையளிப்பும் ஞாயிற்றுக்கிழமை (12-03-2017 மருதமுனை அல்-ஹம்றா வித்தியதாலயத்தில் அமையத்தின் தலைவரும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பதிவாளருமான எம்.எப்.ஹிபத்துல் கரீம் தலைமையில் நடைபெற்றது.
அமையத்தின் திட்டமிடல் செயற்திட்டப் பணிப்பாளர் எம்.ஐ.எம்.வலீதின் நெறிப்படத்தலில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையத்தின் எதிர்கால நடவடிக்கைகள் பற்றியும்,எதிர்கால செயற்திட்டங்கள் திட்டங்கள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே..எம்.ஏ.றஸாக்கிடம் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அதே போன்று மருதமுனைப் பிரதேச பாடசாலைகளில் சிறு சிறு தேவைகளும் கோரிக்கைகளும் இங்கு சமூகமளித்திருந்த அதிபர்களினால் முன்வைக்கப்பட்டது.இந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் றஸாக் ஆறு பாடசாலைகளுக்கும் போட்டோக் கொப்பி இயந்திரங்களை இந்த அமையத்தின் ஊடாக உடனடியாகப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து மருதமுனை கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையத்தற்கு ஒரு இலட்சம் ரூபாவுக்கான காசோலையை மாகாண சபை உறுப்பினர் கே..எம்.ஏ.றஸாக் அமையத்தின் நிதிப்பணிப்பாளர் தென்கிழக்குப் பல்கலைக்கழ உதவிப் பதிவாளர் எம்.மர்சூக்கிடம் கையளித்தார்.
இந்த நிகழ்வில் அமையத்தின் ஆலோசகரும்,கிழக்கு மாகாண சபையின் பிரதிப் பிரதம செயலாளருமான ஏ.எச்.எம்.அன்சார்,மற்றும் அமையத்தின் உறுப்பினர்களும்,பாடசாலை அதிபர்களும்.ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.