28 ஓட்டங்களால் கல்முனை JIMHANA விளையாட்டுக்கழகத்தினர் வெற்றி :

ஜி.முஹம்மட் றின்ஸாத் -

கிழக்கு மாகாணத்தினை உட்படுத்தி 32 கழகங்கள் மோதிக்கொள்ளும் கிழக்கு SPEET T20 CRICKET சுற்றுப்போட்டி சாய்ந்தமருது பொது மைதானத்தில் இடம்பெற்றுவருகிறது அந்த வகையில் 2017.03.24 ம் திகதி கல்முனை JIMHANA s.c VS சாய்ந்தமருது NEW STAR விளையாட்டுக்கழகங்கள் மோதின இதில் கல்முனை JIMHANA விளையாட்டுக்கழகத்தினர் முதலில் துடுப்படுத்தாடி 19 பந்துவீச்சு ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 136 ஓட்டங்களைப்பெற்றனர்.

137 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில் கழம் நுளைந்த சாய்ந்தமருது NEW STAR விளையாட்டுக்கழகத்தினர் 18 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 109 ஓட்டங்களைப் பெற்றனர்.

அந்தவகையில் கல்முனை JIMHANA விளையாட்டுக்கழகத்தினர் வெற்றிபெற்றனர்.

போட்டியில் ஆட்டநாயகன் விருதினை கல்முனை JIMHANA விளையாட்டுக்கழகத்தின் வீரர் AFRAJ RILA பெற்றுக்கொண்டார்.

இப்போட்டிக்கு பிரதம அதிதியாக

அம்பாறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், சாய்ந்தமருது பிமா விளையாட்டு கழகத் தலைவரும், இலங்கை யூத் அல்லியன்ஸ் (Youth Alliance Sri Lanka) அமைப்பின் தலைவருமான Z.M ஸாஜித் அவர்கள் கழந்து கொண்டார்கள் அவர்களோடு

இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பைசர் தில்ஸாத் அஹமட் அவர்களும் கழந்து சிறப்பித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -