திருகோணமலை.ஹொரவ்பொத்தான பிரதான வீதி பன்குளம் பகுதியில் இன்று (23) பிற்பகல் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அண்ணனும்.தங்கையும் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் புத்தளம்.குபுக்கல்ல.ரம்பாவெவ பகுதியைச்சேர்ந்த பீ.என்.தினேஸ் குமாரசிறி (33வயது) பீ.எல்.டில்சானி குமாரசிறி (27வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளத்திலிருந்து திருகோணமலையிலுள்ள கல்வி அமைச்சுக்கு இன்று அதிகாலை இடமாற்றம் தொடர்பான கடிதத்தினை எடுத்து விட்டு செல்லும் வேளை மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகவும் தெரியவருகின்றது.
விபத்து தொடர்பாக மொறவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.