நோட்டன் பிரிட்ஜ் மு.இராமச்சந்திரன் -
அட்டன் நகரசபை பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டகலை பிரதேச சபை வாளாகத்தில் தற்காளிகமாக கொட்டுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்த்தியமாகாண இந்து கலாசார விவசாய தோட்ட உட்கட்டமைப்பு சுற்றாடல் துறை அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்
ஹட்டன் குடா ஓயா பிரதேசத்தில் குப்பைகளை கொட்டிவருதனால் பாதிப்புள்ளாகியிருக்கும் பிரதேசவாசிகளை 23.03.2017 சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார்
பல வருட காலமாக நிலவி வருகின்ற குப்பைகளைஅகற்றுவது தொடர்பான மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினை தொடர்பில் அமைச்சர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் ஆலோசனைக்கமைய மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க அவர்களுடனும் ஹட்டன் பகுதியிற்கான பிராந்திய பொறுப்பதிகாரி அவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொணடுடார்
அப் பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை தற்காலிகமாக கொட்டகலை பிரதேச சபை வளாகத்தில் கொட்டுவதற்கான தீர்வை பெற்றுள்ளதாகவும் வெகு விரைவில் இப் பிரச்சனைக்கான நிரந்தர தீர்வு ஒன்றை பெற்று கொள்வதற்காக ஆலோசிக்கப்பட்டு வருவதாக இன்றைய தினம் குடா ஓயா பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த வேளையில் இவ்வாறு குறிப்பிட்டார். சந்திப்பின் போது அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் வெ.தினேஸ் மற்றும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் அட்டன் பொலிஸார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.