ஜுனைட்.எம்.பஹ்த்-
காத்தான்குடி FM MEDIA UNIT இன் முப்பெரும் விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் திரு.V.R.மகேந்திரன் (JP) தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் காத்தான்குடி நகர சபை செயலாளர் S.M.M.ஸாபி(B.com) அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதிகளாக காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் M.A.C.M.பதுர்தீன்(JP), கலாநிதி N.ஜெகதீசன் (Jp) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ் விருது விழாவில் மாணவர்களது கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் FM MEDIA UNIT இனது 2016 ம் வருடத்திற்கான அதி உயர் விருதுகளான கலாதர்ஷன்.N.ராஜா விருது, ரோஸா விருது,பளீல் DS விருது, சகானா விருது, தமீமி விருது ஆகிய உயரிய விருதுகள் சமூக சேவை, சிறந்த நிகழ்ச்சி தொகுப்பு, கல்விக்கான சிறந்த சேவை ஆகியற்றுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், 2016 ம் வருடத்தில் இடம்பெற்ற புலமை பரிசில் கருத்தரங்கில் கலந்துகொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது..
இந் நிகழ்வில் கல்வியாளர்கள், பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்..