அப்துல்சலாம் யாசீம்-
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சினால் 150 மில்லியன் ரூபாய் செலவில் எதிர்காலம் உதயமானது எனும் தொனிப்பொருளில் திருகோணமலை மெக்கேஷர் விளையாட்டு மைதானத்தில் இம்மாதம் 29ம் திகதி பிற்பகல் 5.30மணிக்கு ஆரம்ப நிகழ்வும் ஏப்ரல் மாதம் 01ம் திகதி இறுதி நகழ்வும் இடம் பெறவுள்ளதாக அமைச்சின் செயலாளா் கே.ஏ.எஸ்.கே கீரகல இன்று (26) ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
ஆரம்ப நிகழ்வு நாட்டின் எதிர்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் பிரதியமைச்சர் நிரோஷன் பெரேராவின் பங்கேற்றலுடன் இடம் பெறவுள்ளது.
இதில் 26 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 6000 இளைஞர் யுவதிகள் கலந்து கொள்ளவுள்ளதுடன் இலங்கையில் இளைஞர் யுவதிகளுக்கு தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாடு தொடர்பான புரிந்துணர்வையும் அனுபவங்களையும் பரிமாறி கொள்வதற்கும் அபிவிருத்தி துறைசார் நடவடிக்கைகள் தொடர்பாக வௌிநாட்டு இளைஞர் யுவதிகளுடன் அனுபவங்களை பரிமாறிக்கொள்வதற்கான சந்தர்பத்தை ஏற்படுத்திக்கொடுத்தல்
அத்தோடு இளைஞர் யுவதிகளிடையே அன்யொன்ய புரிந்துணர்வை மேலும் விருத்தி செய்வதற்காக கல்வி விளையாட்டு கலாச்சாரம் பொழுதுபோக்கு வேலைத்திட்டங்களையும் ஜக்கியத்தையும் சகவாழ்வையும் அடிப்படையாகக் கொண்ட இச்செயற்பாடுகளுக்கான சந்தர்பத்தையும் பெற்றுத்கொடுத்தலே இதன் நோக்கமாகும் எனவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
தற்போதய பிரதம ரணில் விக்ரம சிங்க இளைஞர் விவகார மற்றும் தொழில் வாய்ப்பு அமைச்சராக 1983ம் ஆண்டில் கடமையாற்றிய போது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் திருகோணமலை நிலாவௌி பயிற்சி மத்திய நிலையத்தில் இடம் பெற்ற அதிகாரிகளுடனான கலந்துறையாடலின் போது முன்வைக்கப்ட்ட கருத்துக்களுக்கமைவாக முதலாவது யொவுன் புர நிகழ்வு 1984ம் ஆண்டு 02ம் மாதம் 24ம் திகதி தொடக்கம் 29ம் திகதி வரை புளதிசிபுற நகரை மையமாக கொண்டதாக 5000இளைஞர் யுவதிகளின் பங்கு பற்றலுடன் இடம் பெற்றது.
அதனையடுத்து 27 வருடங்களுக்கு பின்னர் 2016ம் ஆண்டு மாத்தளை சீகிரியாவில் 5000 இளைஞர் யுவதிகள் பங்கு பற்றலுடன் இடம் பெற்றதுடன் இதன் இரண்டாவது நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தில் 6000 இளைுர் யுவதிகளின் பங்கேற்றலுடன் இடம் பெற வுள்ளதாகவும் தேசிய கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் ஏப்ரல் மாதம் 01ம் திகதி இடம் பெறவுள்ள இறுதி நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிலிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க.அமைச்சர்கள்.பிரதியமைச்சர்கள் மற்றும் பாராளமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.