அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை- அடம்பன பகுதியில் முற்சக்கர வண்டியில் கட்டுத்துவக்கு. வெடி பொருற்கள் மற்றும் டை செய்யப்பட்ட கத்திகளுடன் மூன்று பேரை இன்று (26) அதிகாலை கைது செய்துள்ளதாக கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.
குச்சவௌி பிரதேசத்திலிருந்து முற்சக்கர வண்டியில் வந்தவர்களை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்ட போது இப்பொருற்களுடன் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் குச்சவௌி.காசீம் நகர் பகுதியைச்சேர்ந்த ஏ.எம்.நளீம் (39 வயது) ஏ.பீ.அணீஸ் (18வயது) மற்றும் ஜாயா நகர் பகுதியைச்சேர்ந்த கே.பௌசி (18வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை மோட்டார் சைக்கிளில் வந்த அதே இடத்தைச்சேர்ந்த கே.நளிந்த சம்பத் செனவிரத்ன (34 வயது) என்பவரை சோதனையிட்ட போது 02 கிரேம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் இவர்கள் நான்கு பேரையும் இன்று திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.